கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‘கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!

Google Oneindia Tamil News

கோவை : கோயம்புத்தூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் சாதி மத ரீதியாக விரோத உணர்ச்சியை தூண்டும் வகையில் முழக்கமிட்டதாக பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்து அதன் பிறகு சுதந்திரம் பெற்ற சுதந்திர தின விழாவானது நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னதாக சுதந்திர தினத்தை சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் எனவும் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி பேரணிகள் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

5 கட்சி அமாவாசை.. மதுரை சரவணனை விமர்சித்த எச் ராஜா.. டாக்டர் முதலில் இருந்த கட்சி எது தெரியுமா? 5 கட்சி அமாவாசை.. மதுரை சரவணனை விமர்சித்த எச் ராஜா.. டாக்டர் முதலில் இருந்த கட்சி எது தெரியுமா?

பாஜக பேரணி

பாஜக பேரணி


இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் சார்பில் பேரணிகள் ஊர்வலங்கள் தேசியக்கொடி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்


கோவையில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள், கோவை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன் மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை ஏந்தியவாறு இந்த பேரணியில் முழக்கங்களும் எழுப்பட்டது.

திடீர் முழக்கம்

திடீர் முழக்கம்

கோவை மெயின் ரோடு பகுதியில் பேரணி வந்த போது கூட்டத்தில் முழக்கமிட்ட பாஜகவினர் திடீரென பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தும், ராமர் கோயில் கட்டுமான பணிகள் மற்றும் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டிக்கும் வகையில் திடீரென முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

புகார்

புகார்

இதையடுத்து அங்கிருந்த போலீசார் சர்ச்சைக்குரிய வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது என கண்டித்ததோடு பேரணியில் அமைதியாகச் செல்லும்படி வற்புறுத்தினர் இதனால் பாஜகவினர் அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் வேதனையில் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பி நிலையில் இந்த விவகாரம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் புகார் அளித்தார்.

Recommended Video

    75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. தேசியக் கோடியை ஏற்றிய தலைவர்கள் *Tamilnadu | Oneindia Tamil
     வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    இந்த புகாரின் பேரில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட ஏழு பேர் மீது சாதி மதம் இனம் தொடர்பான விரோத உணர்ச்சியை தூண்டுதல் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் பாஜக நிர்வாகிகளிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

    English summary
    A case has been registered against the BJP for raising slogans on caste and religion during a rally organized by the BJP in Coimbatore ; கோயம்புத்தூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் சாதி மத ரீதியாக முழக்கமிட்டதாக பாஜகவினர் மீது காவல் துறை வழக்கு பதிவு
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X