Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரஸ் மாற்ற வந்த பெண்கள்.. கேமரா வைத்து படம் பிடித்த காமுகன்.. மொத்தமாக 3 பேரை அள்ளிய போலீஸ்

காமுகர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெட்ரோல் பங்க் துணி மாற்றும் அறையில் பெண்களை.. ஆபாச படம் எடுத்த கொடுமை.. - வீடியோ

    கோவை: திருடனில் எந்த திருடனை நல்ல திருடன் என்பது? எல்லோருமே ஒரே ரகம்தான்.. பெட்ரோல் பங்கில் பெண்கள் துணி மாற்றுவதை ஊழியர் திருட்டுத்தனமாக வீடியோ எடுக்கவும், மற்றொருவர் துணிந்து தட்டிக் கேட்டார்.. ஆனால் தட்டிக் கேட்டவரின் செல்போனிலேயே அந்த வீடியோக்கள் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.. இப்போது மொத்தமாக 3 பேர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

    கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனியில் உள்ளது. இந்த பங்கில் நிறைய பெண் ஊழியர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    Porn video in coimbatore petrol bunk

    இந்த பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றுவதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர்.. இந்த வீடியோக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோவில், பெண்கள் உடை மாற்றும் ரூமுக்குள், பெண்கள் வருவதற்கு முன்னதாக ஒரு ஆண் ஊழியர் வருகிறார்.. தன்னுடைய செல்போனை ஆன் செய்துவிட்டு, அதை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டுபோகிறார். கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு பெண் ஊழியர்களும் அந்த ரூமுக்குள் வருகிறார்கள்.

    ஒவ்வொருத்தராக வந்து, வீட்டில் இருந்து அணிந்து வந்த டிரஸ்ஸை கழட்டிவிட்டு, அதை ஒரு பையில் வைக்கிறார்கள்.. பிறகு அணியும் யூனிபார்மை போட்டு கொள்கிறார்கள்.. இப்படி 5 பெண்கள் வரிசையாக வந்து டிரஸ் மாற்றுகிறார்கள். இவர்கள் எல்லாரும் அந்த ரூமை விட்டு போன பிறகு, ஏற்கனவே வந்து போன அதே ஆண் ஊழியர் திரும்பவும் ரூமுக்குள் நுழைந்து அந்த செல்போனை எடுத்து செல்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலானது.

    Porn video in coimbatore petrol bunk

    பெண்கள் அறைக்கு சூப்பர்வைஸராக 4 மாதத்துக்கு முன்பு வேலை பார்த்தவர் சுபாஷ் என்பவர்.. அப்போது சக ஊழியர் மணிகண்டன் என்பவர் மனைவியுடன் இதே பங்கில்தான் தங்கியிருந்தார். சுபாஷ் என்பவர் பெண்களை செல்போனில் திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பதை மணிகண்டன் மனைவி பார்த்துவிட்டார்.. விஷயத்தை கணவனிடம் சொல்ல.. ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதற்கு பிறகு செல்போனை பிடுங்கி இருந்த வீடியோவெல்லாம் டெலிட் செய்திருக்கிறார் மணிகண்டன்.. சம்பந்தப்பட்ட பெண்களுக்கு விஷயம் தெரிந்தாலும் யாருமே முன்வந்து புகார் தரவில்லை.. அதே சமயம் சுபாஷையும் பங்க் நிர்வாகத்தினர் வேலையை விட்டு அனுப்பிவிட்டனர்.

    ஆனால் 2 நாட்களுக்கு முன்பு டெலிட் செய்வதாக சொல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவியதும் யாருக்கும் எதுவுமே புரியவில்லை.. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளிக்கவும், பிறகுதான் போலீசார் விசாரணையில் இறங்கினர். சூபர்வைஸர் சுபாஷ் எடுத்த வீடியோவை மணிகண்டன் மொத்தமாக அழிக்கவில்லை.. அதை தன் மொபைலுக்கும் ஷேர் செய்து பத்திரமாக வைத்திருந்துள்ளார்.. அதை தன்னுடைய நண்பர் மருதாச்சலத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.. மருதாச்சலம் ஒரு தனியார் டிவியில் வேலை பார்க்கிறார்.. பெண்களின் முகத்தைகூட மறைக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும், பெண்களை மானபங்கம் படுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+