இன்ஸ்டாகிராமில் பெண் போல பழகி...பேசி... பாலியல் தொல்லை... இளைஞர் கைது
கோவை : கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பெண்ணிடம் பழகியவர் பாலியல் தொல்லை தந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பல பெண்களுடன் நட்பாக பழகும் அந்த இளைஞர் அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த பெண் கொடுத்த புகாரில் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் கல்லூரி மாணவி
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். இவருடன் இன்ஸ்டாகிராமில் பெண் பெயரில் ஒருவர் புதியதாக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆனவர் பெண் பெயரில் கணக்கு இருந்ததால் மாணவி அவருடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த நபரை நம்பி தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். கல்லூரி மாணவியிடம் பேசும்போதெல்லாம் பெண் குரலில் பேசியதால் அந்த மாணவிக்கு சந்தேகம் ஏதும் வரவில்லை. இதற்கிடையே கல்லூரி மாணவியின் புகைப்படங்களை அனுப்புமாறு அந்த நபர் கேட்டுள்ளார். பழகுவது பெண்தானே என்ற அடிப்படையில் தன்னுடைய புகைப்படங்களை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

நிர்வாண படங்களை அனுப்பினார்
சில நாட்கள் கழித்து கல்லூரி மாணவிக்கு அவரது புகைப்படங்கள் வந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்குக் காரணம் அவரது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த நபர் மீது கல்லூரி மாணவிக்கு சந்தேகம் வந்துள்ளது. இதற்கிடையே அந்த மாணவியை அதே எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அந்த நபர் ஆண் குரலில் பேசி உள்ளார். பின்னர் கல்லூரி மாணவி நிர்வாணமாக வீடியோ காலில் வர வேண்டும் என கட்டளை இட்டுள்ளார். அப்படி தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த கல்லூரி மாணவி பெற்றோர் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல் சைபர் கிரைம் போலீசாரை சந்தித்து புகார் அளித்தார்.

கோவையை சேர்ந்தவர் கைது
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் செல்போன் எண்ணை வைத்து மாணவியை மிரட்டியவர் யார் என தேடி வந்தனர். அப்போது அந்த நபர் கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த முட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து நிவாஸ் கைது செய்யப்பட அவரது செல்போனும் போலீஸ் வசம் சென்றது. அவரது செல்போனை ஆராய்ந்ததில் நிறைய பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நிவாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் ஒரு அதிர்ச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி, குடும்ப தலைவிகளையும் ஏமாற்றி, ஆசை வலையில் விழ வைத்து வீடியோவாக எடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கோவை மாவட்டத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications