கோவை அருகே  மகளின் காதலனை வைத்து மாஸ்டர் பிளான்.. மாட்டிக் கொண்ட ராஜேஸ்வரி.. கணவனுக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பிரிவில் விஸ்வநாதன் என்பவர் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். விஸ்வநாதனை இரண்டு இளைஞர்கள் அண்மையில் பின் தொடர்ந்து வந்து தீர்த்துக் கட்ட முயன்றனர். ஆனால் தப்பிவிட்டார். இந்த விவகாரத்தில் ராஜேஸ்வரி தனது மகளின் காதலனை வைத்து மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்றைக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால் கணவனாக இருந்தால் என்ன.. மனைவியாக இருந்தால் என்ன .. ஏன் மகளாக இருந்தால் என்ன, மகனாக இருந்தால் என்ன.. யாராக இருந்தாலும் விட்டுக்கொடுத்து சேர்ந்து வாழ்வது இல்லை.. அண்ணன் தம்பிகள் ஆயுசுக்கும் பேசிக்கொள்வது இல்லை.. அக்காள் தங்கைகள் எதிர்பார்ப்புகள் காரணமாகவே பெற்றவர்களையே கடைசி காலத்தில் கண்டு கொள்ளாமல் விடும் சம்பவங்களும் அதிகமாகிவிட்டது.. கடைசி காலத்தில் மனைவி கூட கணவனை எதிரியாக பார்க்கும் சம்பவங்கள் அதிகமாகி விட்டன. கோவை சூலூர் அருகே கணவனுக்கு எதிராக மனைவி செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rajeshwari s master plan with her daughter s boyfriend near Coimbatore

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பிரிவில் 44 வயதாகும் விஸ்வநாதன் என்பவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு 32 வயது ஆகிறது. சிறுவயதிலேயே ராஜேஸ்வரிக்கு திருமணம் ஆகிவிட்டது.கணவருக்கும் இவருக்கும் 12 வருடம் வயது வித்தியாசம் இருந்துள்ளது. விஸ்வநாதன் ராஜேஸ்வரி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி விஸ்வநாதனை மர்மநபர்கள் கத்தியால் குத்தி தீர்த்துக் கட்ட முயன்றுள்ளனர். இதில் அவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது விஸ்வநாதன் மனைவியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை ஆள்வைத்து கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் அளித்த தகவலின்படி விஸ்வநாதனை கத்தியால் குத்திய சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியை சேர்ந்த விஜயகுமார் மகன் ஹரிபிரசாத் (19), அவருடைய நண்பர் இருகூர் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தர்மராஜ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் போலீசாரிடம் ராஜேஸ்வரி கூறிய தகவல்களை போலீசார் தெரிவித்தனர். இதன்படி, ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தாராம். இதன்படி தனது மகளின் காதலனான ஹரிபிரசாத்தை தொடர்பு கொண்டாராம். பின்னர் அவரிடம் அரிவாள், கத்தி வாங்குவதற்கு ரூ.5 ஆயிரமும், மோட்டார் சைக்கிளும் ஏற்பாடு செய்து கொடுத்தாராம்.

கத்திக்குத்தில் விஸ்வநாதன் தப்பிக்கவே, தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ராஜேஸ்வரியையும், அவரது 2 மகள்களையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை ஆள் வைத்து மனைவியே கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+