சூடுபிடிக்கும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சயானிடம் சிபிசிஐடி போலீசார் துருவித் துருவி விசாரணை!
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. அவர் இறந்த பிறகு ஏப்ரல் 23, 2017 அன்று கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்த நிலையில், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஏராளமான சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், சம்பவத்தன்று நடந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் பெற்று விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 12 பேர் உள்ளிட்ட சிலரின் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜரானார். கடந்த வாரம் ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று ஆஜராகி உள்ளார் சயான். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி போலீசார் முன்பாக ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று சயான் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications