ஜூஸ் கொடுத்தார்.. குடித்தேன்.. மயங்கினேன்.. பலாத்காரம் செய்து மிரட்டுகிறார்.. கோவை பெண் குமுறல்
இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டுவதாக ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
கோவை: தெரிந்தும் துணிந்தும் தப்பை செய்ய வேண்டியது... அதில ஒரு பிரச்சனைன்னு வந்தப்புறம் போலீஸ்கிட்ட உதவி தேடி ஓடி வரவேண்டியது! இப்படித்தான் சில பெண்கள் இப்போது இருக்கிறார்கள்!!
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஒரு டீச்சர்தான் இவர். 40 வயதாகிறது. இவர் கோவையில் உள்ள ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை பாரத்து வருகிறார். ஆனால் இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

பேஸ்புக் அறிமுகம்
போன வருடம் உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பம்பட்டியை சேர்ந்த ராஜபிரவீண் என்பவர் பேஸ்புக் மூலம் டீச்சருக்கு அறிமுகமாகி உள்ளார். ப்ரவீனுக்கு 30 வயதாகிறது. பேஸ்புக்கில் தொடர்ந்த நட்பு கள்ளக்காதல் வரை கொண்டு போய்விட்டது. இந்த நிலையில், சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் டீச்சர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

வாடகைக்கு ரூம் எடுத்தார்
"ராஜபிரவீனுடன் ஏற்பட்ட பழக்கம் காதல் வரை வந்துவிட்டது. ராஜபிரவீன் பி.எஸ்.சி முடித்து விட்டு குரூப்-2 தேர்வு எழுத போகிறேன் என்று கூறினார். அதற்காக நான் நிறைய பண உதவிகளை அவருக்கு செய்தேன். ஒருநாள் அவர் கோவை சின்னியம்பாளையம் வந்தார். என்னை ஒரு ஹோட்டலுக்கு கூட்டி போனார். அங்கே ஒரு ரூம் வாடகைக்கு எடுத்தார்.

ஜூஸ் கொடுத்தார்
அந்த அறைக்கு என்னை கூட்டி கொண்டு போய் ஜூஸ் கொடுத்தார். அந்த ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டார். அது தெரியாமல் நான் குடித்து மயங்கி விழுந்து விட்டேன். அந்த நேரத்தில் ராஜபிரவீன் என்னை பலாத்காரம் செய்து, அதை அவரது செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டார். பிறகு அடிக்கடி வீடியோவை என்னிடம் காட்டி 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் பிடுங்கி கொண்டார்.

ராஜபிரவீன் கைது
இன்னும் 2 லட்சம் ரூபாய் தராவிட்டால் வீடியோவை பேஸ்புக்கில் போட்டுவிட்டுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது எப்படியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு டீச்சர் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கை பதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜபிரவீனை தேடி வந்தனர். ஆனால் ஒரே நாளில் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை தற்போது நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications