'கில்லி' பிரகாஷ்ராஜின் 'செல்லம்ம்...'என்னுடைய பிட்டுதான்.. நான் தான் முதலில் பயன்படுத்தினேன்: சீமான்
கோவை: கில்லி படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பயன்படுத்தி புகழ்பெற்ற 'செல்லம்ம்..' என்ற வசனத்தை முதன் முதலில் தாம் பயன்படுத்தியதாகவும் அதுவே பரவி கில்லி படத்தில் இடம் பெற்றதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுவாரசிய தகவலைத் தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: நடிகர் வடிவேலு ராத்திரியான எனக்கு அடிச்சிருவாரு.. செல்லம்னு.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? ராத்திரியில் நான் அலைபேசியில பேசிக்கிட்டு இருக்கேன்.. அதில் "சொல்லுடி செல்லக்குட்டி.. அப்படி இல்லைடி செல்லக்குட்டி..' என சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்போது என் மாமியார் தரையில் படுத்திருக்காங்க.. நான் வெளியில் வந்து இப்படி பேசிகிட்டு இருக்கும் போது மாமியார் கேட்டுட்டாங்க போல.. யாருகூடவோ ராத்திரியில 'செல்லக் குட்டி செல்லக்குட்டி'ன்னு பேசிறாரேன்னு.. காலையில் என் பொண்டாட்டிகிட்ட பத்த வைக்கனும்ல..

ராத்திரியில யாரோடவோ எந்த முண்டச்சிகிட்டவோ செல்லக்குட்டி... செல்லக்குட்டின்னு பேசுறார் என மனைவியிடம் மாமியார் சொன்னார்.. அதற்கு அம்மா அது அண்ணன் வடிவேலுகூட பேசியிருப்பார் என பதில் சொல்லி இருக்கிறார். வடிவேலும் அவரும் அப்படியா பேசுவாங்க? என மாமியார் கேட்டுள்ளார்.
முதன் முதலில் செல்லம்னு சினிமாவில் நான்தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, செல்லம் இங்க வாடி..போடி என்றுதான் நானும் அவரும் பேசிக் கொள்வோம். அது அப்படியே பரவியிருச்சு. அது பரவும்போது கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும்போது சேர்த்து வெச்சிட்டாங்க.. அது நான் போட்டதுதான்.. என் பிட்டுதான்.. "செல்லம்ம்ம்'னு பிரகாஷ்ராஜ் சொல்வாரே அதுதான். நாம் சிரிக்க சிரிக்க பேசுவோம்.. சின்ன ஆளுங்கதான்.. ஆனால் சீரியசாகவே செய்வோம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications