பதவியே வேண்டாம்.. கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா.. செந்தில் பாலாஜிக்கு எகிறும் பிரஷர்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக உள்கட்சி பிரச்சனைகளும் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. கோவையில் அடுத்த வாரம் திமுக அடுத்தடுத்து 2 பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் உள்கட்சி பூசலில் ஒரு பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களின் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது [Senthil Balaji].

senthil-balaji-coimbatore-dmk-cadres-resigned-their-party-posting-over-internal-politics

கோவை திமுக திட்டம்

கொங்கு மண்டல அரசியல் களம் அதிக கவனம் பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் தங்களின் வெற்றியை தக்க வைப்பதற்கு அதிமுக தீவிர முயற்சி செய்து வருகிறது. அதேநேரத்தில் கொங்கு மண்டலத்தின் ஆழமாக கால் பதிப்பதற்கு திமுகவும் காய் நகர்த்தி கொண்டிருக்கிறது. கடந்த 5 வருடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகமுறை விசிட் செய்தது கோவையில் தான்.

கோவை, கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக வெற்றியை உறுதி செய்ய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, பிப்ரவரி 27 ஆம் தேதி திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி அமைப்பாளர்கள் பயிற்சி நடத்தப்படவுள்ளது.

நிர்வாகிகள் ராஜினாமா

இதற்கான பணிகளில் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். சரியாக வேலை செய்யாத நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று செந்தில் பாலாஜி எச்சரித்திருந்தார். இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை திமுக தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம், திருமலையம்பாளையம் திமுக பேரூர் செயலாளர் ராமராஜ் என்பவருக்கு பதிலாக ஆர். கிருஷ்ணசாமி என்பவர் திருமலையம்பாளையம் பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என கூறியிருந்தார்.

இது அந்தப் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 98 பூத் கமிட்டி ஏஜென்ட்கள், வார்டு செயலாளர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து துரைமுருகனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தேர்தலுக்கு அறிவிப்பிற்கு சிறிது காலமே உள்ளது. திமுக நிர்வாகிகளின் இந்த செயல் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகனுக்கு கடிதம்

கோவை திமுக நிர்வாகிகளின் ராஜினாமா கடிதத்தில், "ராம்ராஜ் நீண்ட காலமாக கட்சி பணிகளை செய்து வருகிறார். அவரின் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலினே பாராட்டியுள்ளார். உள்கட்சி தேர்தல் நடத்தாமல் சாதிய அடிப்படையில் தங்களுக்கு வேண்டியப்பட்டவர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்களை பதவிகளில் இருந்து நீக்குகிறார்கள். எங்களுக்கு இப்படிப்பட்ட பதவி வேண்டாம். அடிப்படை உறுப்பினர்களாக மட்டும் இருந்து கொள்ள முடிவு செய்துவிட்டோம். எங்கள் பகுதியில் மொத்தம் 11 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 8 முகவர்கள் ராஜினாமா மற்றும் வட்டச் செயலாளர்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு பிரஷர்

ஏற்கனவே கோவை திமுக நிர்வாகிகள் மற்றும் செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்கள் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அந்தப் பிரச்சனைக்கு தீர்வு எட்ட முடியவில்லை. அதற்குள் அடுத்த பிரச்சனை கிளம்பியிருப்பது செந்தில் பாலாஜிக்கான பிரஷரை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+