கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம்
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற அஸைன்மென்டுடன் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். கோவைக்கு அவர் சர்ப்ரைசாக வைத்துள்ள அறிவிப்புகளால் களத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என்று திமுகவினர் நம்புகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். தவெக மட்டும் தான் களத்தில் மந்தமாக உள்ளது. திமுக கூட்டணி அரசு பலத்துடன் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

செந்தில் பாலாஜி கோவை தெற்கு
கோவையில் தங்களின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை இறக்கியுள்ளனர். அவர் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல், கோவை முழுவதும் திமுகவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார். செந்தில் பாலாஜி திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார்.
அதனால் அவர் பொறுப்புள்ள தொகுதிகளுக்கும் செந்தில் பாலாஜி பயணம் செய்கிறார். செந்தில் பாலாஜி வெளியூரைச் சேர்ந்தவர் என்கிற பிரச்சாரத்தை அதிமுக, பாஜக முன் வைக்கிறது. இதை உடைப்பதற்காக கோவை தெற்கு தொகுதியில் ஒரு வீடு பார்த்து குடியேற திட்டமிட்டுள்ளார். செந்தில் பாலாஜி தொகுதி முழுவதும் நடந்துசென்று பிரச்சாரம் செய்கிறார்.
திட்டங்கள்
அவரை போலவே மற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் நடந்து சென்று பிரச்சாரம் செய்ய சொல்கிறார். நடந்து செல்லும்போதுதான் மக்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க முடியும் என்று நம்புகிறார். செந்தில் பாலாஜி கோவை தெற்கில் நடந்து சென்று பரப்புரையில் ஈடுபடும்போது, மக்கள் பிரச்சனைகளை குறிப்பு எடுக்க ஒரு டீம் வருகிறது.
கோவை தெற்கு தொகுதி கோவையின் இதய பகுதியில் உள்ளது. அங்கு ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் நிறைவேற்றியுள்ளனர். திமுக ஆட்சி அமைந்தால் அங்கு மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் கோரிக்கைகளை தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் கோவை தெற்கு தொகுதிக்கு என்று சிறப்பு திட்டங்களை அறிவிக்கவுள்ளாராம். முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று கோவை தெற்கு மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்திற்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications