Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களத்தை தமிழ்நாடை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகளவு கோவையில் இறங்கியுள்ளனர். அவர்களின் அதிரிபுதிரி பணிகளால் அதிமுக அல்லாடிக் கொண்டிருக்கிறது.

கோவையில் தங்களின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காக செந்தில் பாலாஜியை கரூரில் இருந்து ஸ்டாலின் இறக்கிவிட்டுள்ளார். சொந்த ஊரான கரூரில் இருந்து, அதிமுக வலுவாக உள்ள கோவைக்கு வந்துள்ளது செந்தில் பாலாஜி எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க். செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல், கோவை முழுவதும் திமுகவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார்.

senthil-balaji-senthil-balaji-sent-karur-team-to-capture-coimbatore-made-admk-shock

கோவையில் செந்தில் பாலாஜி

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில திமுக பெரிய வெற்றியை பெற்றது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானது. கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை மாவட்டத்தின் இதய பகுதியில் அமைந்துள்ளது. அங்கு காலூன்றி விட்டால் மாவட்டம் முழுவதும் திமுகவை ஆழமாக பதிய வைக்க முடியும் என்று செந்தில் பாலாஜி நினைக்கிறார்.

இதற்காக அவர் பல்லேறு வியூகங்களை வகுத்து வருகிறார். தெற்கு தொகுதியில் 11 வார்டுகள் உள்ளன. 1.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு நடந்தே சென்று தான் பிரச்சாரம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். இதனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கும் திமுகவில் அவர் தான் பொறுப்பாளர்.

கரூர் டீம் பக்கா பிளான்

தினசரி காலை வெளியூர்களில் சென்று ஆய்வு செய்துவிட்டு, மாலை கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்கிறார். உள்ளூர் நிர்வாகிகளுடன், கரூரில் இருந்து மிகப்பெரிய படையையும் அவர் இறக்கியுள்ளார். உள்ளாட்சி தேர்தலின்போதும் கரூரில் இருந்து தன்னுடைய ஆதரவாளர்களை செந்தில் பாலாஜி இறக்கி விட்டிருந்தார். அது அவர்களுக்கு கைக்கொடுத்தது.

அதே பார்முலாவை இந்த தேர்தலிலும் பின்பற்றுகிறார்கள். தெற்கு தொகுதிக்குட்பட்ட சுமார் 200 பூத்களுக்கும் கரூரில் இருந்து அழைத்து வந்து பணியாற்றி வருகிறார்கள். பூத், வார்டு, பகுதி என அனைத்து மட்டங்களிலும் கரூர் நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை திமுகவில் உள்கட்சி பிரச்சனைகள் அதிகம். அதனால் செந்தில் பாலாஜி கோவை திமுகவில் யாரையும் நம்புவதில்லை.

மாஸ்டர் மைண்ட்

கரூர் டீம் தான் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். அவர்களின் மேற்பார்வையில் கோவை திமுகவினர் பணியாற்றுகிறார்கள். தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே கரூரில் உள்ள அவரின் நெருங்கிய வட்டத்தினர், சிலர் கோவை தெற்கு தொகுதிக்கு வந்து பணிகளை தொடங்கிவிட்டனர். கரூர் டீம் எல்லா பக்கமும் இருப்பதால் கோவை திமுகவினர் கப்சிப் என்று பணியாற்றி வருகிறார்கள்.

பிரச்சாரம், நிகழ்ச்சிகள், பரிசு, பணம் எல்லாவற்றையும் கரூர் டீம் தான் செயல்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. அதற்கு பயந்துதான் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் செந்தில் பாலாஜி கரூரில் இருந்து பெரிய படையை இறக்கியுள்ளதாக புகார் கூறியுள்ளார். அண்ணாமலையும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். கரூரை சேர்ந்த 18 சுயேச்சைகள் கோவை தெற்கில் போட்டியிடுவது கூட செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான் தானாம்.

அதிமுக அப்செட்

வாக்குபதிவு, வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சைகளின் பூத் ஏஜென்ட்களை திமுக, அதிமுக விலை கொடுத்து வாங்குவார்கள். அந்தடிப்படையில் தான் செந்தில் பாலாஜி கடைசி நேர திட்டங்களுக்காக கரூரில் இருந்து தனது படையை இறக்கிவிட்டுள்ளாராம். இந்த நடவடிக்கைகளால் அதிமுக மற்றும் பாஜக அப்செட்டாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+