தொண்டாமுத்தூரில் பக்கா ஸ்கெட்சுடன் இறங்கிய செந்தில் பாலாஜி.. வேலுமணிக்கு செக்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த முறை தோல்வியடைந்த கோவையில் இந்த முறை வெற்றி பெற திமுக பல்வேறு அஸ்திரங்களை ஏவி வருகிறது. அதிமுக எஸ்.பி. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அங்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான வியூகங்களை செந்தில் பாலாஜி விளக்கியது திமுகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

senthil-balaji-smart-move-to-capture-velumani-s-thondamuthur

தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள்

அப்போது செந்தில் பாலாஜி பேசும்போது, "கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நம்முடைய தலைவர் தான் வேட்பாளர் என நினைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். உங்கள் பொறுப்பில் உள்ள வாக்குச்சாவடிகளில் கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட இந்தமுறை அதிக வாக்குகள் பெற வேண்டும். நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் சென்று நம் அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி மன மாற்றம் செய்ய வேண்டும். அவர்களை வாக்காளர்களாக மாற்றினால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெற்றி பெறும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட நாம் வெற்றி பெறவில்லை. ஆனாலும் சென்னைக்கு அடுத்தபடியாக முதலமைச்சர் அதிகமாக வருகை புரிந்தது கோவை மாவட்டத்திற்கு தான். அதேபோல அதிக திட்டங்களை கொடுத்ததும் கோவை மாவட்டத்திற்கு தான். கோவையின் 10 தொகுதிகளிலும் வெல்வது தான் முதலமைச்சருக்கு நாம் செலுத்துகின்ற நன்றி கடன். அதிலும் தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றோம் என்கிற சரித்திர சாதனையை உருவாக்கும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

மேடையில் உள்ள நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கீழேதான் அமர வேண்டும். அது நானாக இருந்தாலும் சரி. கீழே இருப்பவர்கள் நன்கு வேலை செய்தால் அவர்கள் மேடைக்கு வரலாம். கட்சி நிகழ்ச்சி என்றால் பிடித்தாலும் பிடிக்காவிடினும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை எச்சரிக்கையாக கூறுகிறேன். உங்கள் பகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறீர்களோ அதற்கேற்ப பரிசுகள் உண்டு.

பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியாக பணி செய்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க முடியும். பூத் கமிட்டியினர் தான் இயக்கத்தின் ஆணிவேர். தேர்தல் களத்தில் அவர்கள் தான் களத்தில் முன்னின்று பணியாற்றுவார்கள். அவர்களின் கருத்திற்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அடிமட்ட தொண்டர்களை மதிக்காதவர்கள் அங்கு இருக்க முடியாது. அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றார்.

கோவையின் 10 தொகுதிகளும்

பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "கோவையில் எஸ்.பி வேலுமணியா அல்லது செந்தில்பாலாஜியா என்ற கேள்வி தேவையில்லை. யாரும் யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. கோவையில் ஒரு எஸ் பி வேலுமணி சென்றால், இன்னொரு வேலுணி வருவார். அதேபோல திமுகவில் ஒரு தொண்டாமுத்தூர் ரவி சென்றால் இன்னொரு ரவி வருவார். எங்களைப் பொருத்தவரை ஓரணியில் தமிழ்நாடு என்பதில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+