சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டுக்கு என தனி சிறப்பு இருக்கிறது. சாதி ஒழிப்பில் நமது மாநிலம் எப்போதும் ஓரடி முன்னாள்தான் நிற்கிறது. இப்பப்டிபட்ட மண்ணில், சாதி பெயருடன் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியில் சாதி பெயருடன் கூடிய வேட்பாளரான 'ஸ்ரீநிதி நாயுடுவை' களமிறக்கியிருப்பது, சொந்த கட்சியினரிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Singanallur Congress Candidate

சம்பவம் செய்த காங்கிரஸ்

வழக்கமாக தேர்தல் வந்துவிட்டாலே, சின்ராசு காங்கிரஸை கையில் பிடிக்க முடியாது. இந்த முறையும் அப்படித்தான். அடித்து பிடித்து முதல் ஆளாய் வந்து தொகுதிகளை கேட்டு வாங்கி பெற்றுக்கொண்ட காங்கிரஸ், எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர்தான், தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்தது. லேட்டாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய கட்சியினர், பல தொகுதிகளில் வேட்பாளர் பெயரை சொல்லாமல், கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க.. என்று வாக்கு கேட்டிருந்தனர்.

புதிய சர்ச்சையில் காங்கிரஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் அறிவிக்கப்படாததால் கை சின்னத்திற்கு ஒட்டு கேட்டு சென்றார். இப்படித்தான் காங்கிரஸ் டிசைன் இருக்கிறது. இது ஏராளமான விமர்சனங்களை கிளப்பிய நிலையில், தற்போது புது சர்ச்சையில் காங்கிரஸ் சிக்கியிருக்கிறது. அதாவது சாதி பெயரை கொண்ட வேட்பாளரை சிங்காநல்லூர் தொகுதியில் நிற்க வைத்திருக்கிறது.

சாதி ஒழிப்பில் தமிழ்நாடு

சாதி எனும், கடந்த 2000 ஆண்டு கொடுமையை ஒழிக்க, தமிழ்நாட்டில் ஏராளமான தலைவர்கள் எவ்வளவோ போராடி வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில், சாதியை பெயருடன் சேர்த்திருக்கும் வேட்பாளரை எப்படி தேர்தலில் நிற்க வைக்க காங்கிரஸுக்கு மனசு வந்துச்சு? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

கொங்கு மண்டலம்

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட, கோயம்புத்தூர் போன்ற கொங்கு மண்டலத்தில் சாதியின் இறுக்கம் இன்னும் பலமாகத்தான் இருக்கிறது. இதை உடைக்க தினம் தினம் போராட்டங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இப்படியான பகுதியில் சாதியை பெயருக்கு பின்னால் சேர்த்திருக்கும் 'ஸ்ரீநிதி நாயுடுவை' வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் காங்கிரஸ் என்ன சொல்ல வருகிறது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+