Podanur Railway station: களையிழந்த கோவை போத்தனூர் ரயில் நிலையம்! ரூ 100 கோடியில் மேம்பாட்டு பணிகள்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூர் ரயில் சந்திப்பை இரண்டாவது ரயில் முனையமாக (டெர்மினல் யார்டு) மாற்றுவதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் என்னென்ன பயன்கள் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ரயில் தகவல்கள் எனும் எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ₹100 கோடி செலவில் போத்தனூர் சந்திப்புக்கு புதிய 'டெர்மினல் யார்டு' - தென் ரயில்வே டெண்டர் வெளியீடு!

கோயம்புத்தூரின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான போத்தனூர் சந்திப்பில் (Podanur Junction) சுமார் ₹100 கோடி மதிப்பீட்டில் புதிய கோச் டெர்மினல் யார்டு (பராமரிப்பு வசதி) அமைப்பதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
செலவு: சுமார் ₹100 கோடி.
பணி கால அளவு: ஒரு வருட காலத்திற்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வசதி: இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பிட் லைன்கள் (Pit Lines) அமைப்பதாகும். இது ரயில் பெட்டிகளின் அடிப்பகுதியை ஆய்வு செய்யவும், சுத்தம் செய்யவும், பழுதுகளைச் சரிசெய்யவும் ரயில்வே ஊழியர்களுக்கு உதவும்.
பயன்கள் என்னென்ன?
நெரிசல் குறைப்பு: இந்த புதிய டெர்மினல் யார்டு அமைவதன் மூலம், கோயம்புத்தூர் சந்திப்பில் (Coimbatore Junction) நிலவும் நெரிசலைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
பராமரிப்பு மேம்பாடு: ரயில்களின் பராமரிப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய ரயில்களை இந்த நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு வழிவகுக்கும்.
பொருளாதார வளர்ச்சி: புதிய பயணிகள் வசதிகள் மற்றும் ரயில் போக்குவரத்து அதிகரிப்பு மூலம் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
ஸ்டேஷன் தரம்: போத்தனூர் சந்திப்பு தற்போது NSG 4 (Non Suburban Grade - ஆண்டு வருமானம் ₹10 முதல் ₹20 கோடி) நிலையப் பிரிவில் உள்ளது.
மேலும், போத்தனூர் சந்திப்பில் தற்போது அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ₹23 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தால் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரயில் சேவை மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போத்தனூர் ரயில் நிலையம் கோவையில் அமைந்துள்ள பழைய ரயில் நிலையம் ஆகும். இது தற்போது கோவையின் இரண்டாவது முனையமாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதான் இந்த மாவட்டத்தின் முதல் ரயில் நிலையமும் கூட! அது போல் தமிழகத்தின் மூன்றாவது பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று.
இந்த மேம்பாட்டு பணிகள் நடந்து முடிந்தால் கோவையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications