SP Velumani: எகிறும் எதிர்பார்ப்பு.. தொண்டாமுத்தூரில் வெற்றி பெற்ற வேலுமணி.. திமுகவுக்கு பின்னடைவு
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன் கோவை மாவட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. அதிமுக கோட்டையாக உள்ள கோவையில் ஓட்டை போட திமுக முயற்சித்து வருகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக எஸ்பி வேலுமணி வெற்றி பெற்றுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் 2,93,324 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 2,59,606 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுகவில் முன்னாள் ஊராட்சி தலைவர் என்.ஆர்.கார்த்திகேயன், தவெகவில் சதீஷ், நாம் தமிழர் கட்சியில் ரஜபு நிஷா உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

1 லட்சம் வாக்குகள் வித்தியாசம்
கடந்த 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலில் அங்கு வேலுமணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016 தேர்தலில் சுமார் 60,000 வாக்குகள் வித்தியாசத்திலும், கடந்த 2021 தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வேலுமணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என வேலுமணி கூறியுள்ளார்.
வேலுமணிக்கு எதிராக திமுக இந்தமுறை தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளனர். செந்தில் பாலாஜியே நேரடியாக இறங்கி வியூகங்களை வகுத்துள்ளார். தவெக போட்டியிட்டுள்ள சதீஷ், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி ராஜூவின் மகன் ஆவார். இந்த ராஜூ தான் வேலுமணியின் ஆரம்பகால குரு. அதனால் தவெக கட்சியை கடந்து சதீஷ்க்கும் அங்கு செல்வாக்கு உள்ளது.
3 முறை எம்எல்ஏ
ஆனாலும் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக இருப்பதாலும், அதில் 2 முறை (2011-2021) அமைச்சராக இருந்ததாலும் வேலுமணி தொகுதிக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அங்கு அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அங்கு சிறுபான்மை மக்கள் கணிசமாக உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது வேலுமணிக்கு மைனஸ். அந்த வகையில், இன்று எஸ்பி வேலுமணி 4 ஆவது முறையாக வாகை சூடுவாரா, திமுக கடும் போட்டியைக் கொடுக்குமா, தவெக சதீஷ் அதிக வாக்குகளைப் பெறுவாராஎன்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
எஸ்பி வேலுமணி முன்னிலை
இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்பி வேலுமணி 93,316 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் சதீஷ் 28,591 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்று திமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளார். திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 75,917 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். 14 ஆயிரத்து 725 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்பி வேலுமணி வெற்றி பெற்றுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications