சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த சூப்பர் சான்ஸ்.. கோவை மாநகராட்சி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் நாளை ஜனவரி 4 மற்றும் 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

coimbatore corporation

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக) வரிவசூல் பணி நடைபெறும்.

மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஜனவரி 4, 5 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். வார்டு எண் 7, 8க்கு நேரு நகர், பேருந்து நிறுத்தம் அருகில், காளப்பட்டியிலும், வார்டு எண் 36க்கு ரவி முருகா ப்ளாசியே அப்பார்ட்மெண்ட் (Ravi muruga palasio apartment) வடவள்ளி பேருந்து நிலையம் அருகிலும் (ஜனவரி 4, சனிக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறுகிறது.

வார்டு எண் 74க்கு நாயக்கர் தோட்டம் சமுதாயக்கூடம், பூசாரிபாளையத்திலும் (ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை மட்டும்),வார்டு எண் 1க்கு ருக்கம்மாள் காலனி, துடியலூரிலும், வார்டு எண் 88க்கு தர்மராஜா கோவில் மண்டபம், குனியமுத்தூரிலும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல, வார்டு எண் 97க்கு அஸோஷியேசன் கட்டிடம் ஹவுசிங் யூனிட் பேஸ்-II, மதுக்கரை சாலையிலும், வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4, 5 ஆம் தேதி) ஆகிய இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+