கோவையில் சொத்து வரி செலுத்த சூப்பர் சான்ஸ்.. இன்று முகாம் நடைபெறவுள்ள இடங்களின் முழு விவரம் இதோ
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் வசித்து வரும் மக்கள் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் இன்று (பிப்ரவரி 2 ஆம் தேதி) எந்தெந்த பகுதிகளில் எல்லாம் நடைபெறவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள் மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் பிப்ரவரி 2 ஆம் தேதி இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:- வார்டு எண் 23க்கு விநாயகர் கோவில், பூங்கா நகரிலும், வார்டு எண் 56க்கு சுங்கம் மைதானம். ஒண்டிப்புதூரிலும், வார்டு எண் 40க்கு விநாயகர் கோவில் ஹவுசிங் யூனிட், லிங்கலூர் ரோடு, வீரகேரளத்திலும், வார்டு எண் 33க்கு அங்கன்வாடி மையம் சக்தி நகர் புளியமரம் (Bus Stop)லும், வார்டு எண் 15க்கு அனன்யா நானா நானி அப்பார்ட்மெண்ட், கேஎன்ஜி புதூரிலும், வார்டு எண் 19க்கு அம்மா உணவகம், மணியகாரம்பாளையத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
வார்டு எண் 25க்கு அரசு உயர் நிலை பள்ளி, காந்திமாநகரிலும், வார்டு எண் 89க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), சுண்டக்காமுத்தூரிலும், வார்டு எண் 90க்கு W- பிளாக், கோவைப்புதூரிலும், வார்டு எண் 94க்கு மாரியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையத்திலும், வார்டு எண் 95க்கு திருமறை நகர், போத்தலூரிலும், வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா.நாராயணசாமி வீதி, சங்கனூர், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி ஸ்கூல் கெம்பட்டி காலனியிலும் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், பிப்ரவரி 2 ஆம் தேதியான இன்று மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications