"குறும்பா.. என் உயிரே நீதான்டா.." கோவையில் சுற்றி வளைத்த நாய்கள்.. துடித்த சிறுவன்.. மின்னலாய் தந்தை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே சிறுவனை தெருநாய்கள் சுற்றி வளைத்து அச்சுறுத்திய நிலையில், மகனின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் இருந்த தந்தை ஓடோடி வந்து மகனை பத்திரமாக தூக்கி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தையின் பாசத்திற்கு ஈடு இணையேது என்ற வாசகங்களுடன் இணையத்தில் நெட்டிசன்கள் இந்தக் காட்சிகளை வைரலாக்கி வருகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தற்போது தெருநாய்கள்தான் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. சாலையில் சுற்றி திரியும் நாய்கள் சில சமயம் நடந்து வருவோருக்கும், இருசக்கர வாகனத்தில் வருவோருக்கும் எமனாக இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் இரவில் தெருக்களில் செல்பர்கள் நிலை ரொம்ப சிரமம்தான். எந்த பக்கம் இருந்து நாய்கள் வருகின்றன என்று சொல்ல முடியாது என திடீரென்று சுற்றி வளைத்து குரைக்க ஆரம்பித்து விடும்.

Stray Dogs Coimbatore Trend

தெருநாய்கள்: பயந்து பயந்து செல்லும் அளவிற்கு தெருநாய்கள் உக்கிரமாக சுற்றுகின்றன. நள்ளிரவு வேளைகளில் வேலைமுடிந்து வருவோர், உயிரை கையில் பிடித்தபடி பைக்கில் வரவேண்டிய நிலை இருக்கிறது. அதிலும் பைக், சைக்கிளில் சென்றால் விடாமல் துரத்தி செல்கின்றன. சில சமயம் கடித்தும் வைத்து விடுகின்றன. இதனால், மருத்துவமனைக்கு ரத்த காயங்களுடன் ஓடும் நிலையும் ஏற்படுகிறது.
அனுமதி வாங்க வேண்டும்: தெருநாய்கள் மட்டும் தான் பிரச்சினை என்று சொல்வதற்கு இல்லை. வளர்ப்பு நாய்களும் கூட சில சமயம், வளர்ப்பவரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் செல்வோரை பாய்ந்து கடித்து விடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை ஆயிரம் விளக்கில் சிறுமியை அபாயகரமான வளர்ப்பு நாய் ஒன்று கடித்த விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வீடுகளில் நாய் வளர்க்க அனுமதி வாங்க வேண்டும் என்றும் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அண்மையில் உத்தரவிட்டார்.

சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள்: இதனிடையே தெரு நாய்களை கூட மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று கருத்தடை செய்து அதன் விரீயத்தை குறைக்கும் செயல்களில் முன்பை விட தீவிரமாக இறங்கி உள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. இந்த நிலையில் தான் கோவையில் தெருநாய்கள் ஒன்று சிறுவனை சுற்றி வளைத்து அச்சுறுத்தின.

Stray Dogs Coimbatore Trend

ஓடோடி வந்த தந்தை: அப்போது தெருவில் சத்தம் கேட்டு வந்த தந்தை ஓடி வந்து மகனை தூக்கி சென்றார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது வீட்டிற்கு வெளியே விளையாட சிறுவன் வந்து நிற்கிறான். சிறுவனை பார்த்ததும், சில தெருநாய்கள் குரைத்துக் கொண்டு வருகின்றன.

இதனால் பதறிப்போன சிறுவன் அங்கே நிற்கும் ஒரு பைக்கிற்கு பின்னே செல்ல.. அதற்குள் நான்கு ஐந்து நாய்கள் சுத்து போட தொடங்குகின்றன. சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டதும் வீட்டில் இருந்த தந்தை ஓடோடி வந்த தூக்கி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+