'வர்லாம் வர்லாம் வா'.. சூப்பர் முயற்சியை கையிலெடுத்த கோவை போலீஸ்.. இனி நோ எஸ்கேப்
கோவை : கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே போக்குவரத்து சிக்னல்களை நவீன முறையில் ரிமோட் கண்ட்ரோலர் மூலம் பெண் காவலர் ஒழுங்குபடுத்துகிறார்.
கோவையில் சோதனை முயற்சியாக போக்குவரத்து போலீசார் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு, உள்பட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.
இந்த சிக்னல்களை போக்குவரத்து போலீசார் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

அதிக வாகனங்கள்
இதனால் அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் ரோட்டில் தேவையான நேரம் அவகாசம் கொடுத்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிக்னல்கள் போலீசார் பணியில் இல்லாத போது தனியாக முறையில் டைமர் வைத்து இயக்கி வருகின்றன.

விதிமீறல்
போக்குவரத்து போலீசார் ஒரே இடத்தில் அமர்ந்து சிக்கல்களை இயக்குவதால் சிக்னலை மதிக்காமல் செல்வதும் அதிக வேகமாக சிக்கல்களை கடப்பது போன்ற விதி மீறல்கள் நடக்கின்றன. இதனை போலீசார் தங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து கீழே இறங்கி வந்து தடுக்க முடியாததால் விதிமீறல் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர்.

கணபதி டெக்ஸ்டூல்
இதையடுத்து தற்போது சிக்னல்களை போலீசார் ரோட்டில் நடந்து கொண்டே ரிமோட் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறும்போது முதற்கட்டமாக சோதனை முறையில் கோவை கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எளிதாக சிக்குவார்கள்
இங்கு உள்ள போக்குவரத்து போலீஸ்காரர் கையில் வைத்துக்கொண்டு இயக்குவார். இவர் கூண்டில் அமராமல் ரோட்டில் நடந்து கண்காணித்துக்கொண்டே சிக்னலை இயக்கலாம் போக்குவரத்து போலீஸ்காரர் ரோட்டில் நிற்பதால் சிக்னல் விதிமீறல்களை கட்டுப்படுத்தப்படும் இதை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக பிடி பெறுவார்கள்.

சென்சார் மூலம் சிக்னல்
சென்சார் மூலம் சிக்னல் இருந்து 100 மீட்டர் தூரம் வரை இயக்க முடியும் அடுத்த கட்டமாக லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இதன் பின் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என்று கூறினார்.

எப்படி இயங்குகிறது
ரிமோட்டில் 1 முதல் 8 வரை வரிசை எண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு வழித்தடமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எந்த எண்ணை போலீசார் இயக்குகிறாரோ அந்த எண்ணுக்கான சிவப்பு, பச்சை விளக்கு எரியும், தானியங்கி முறையில் இயக்குவதற்கும் பிரத்தியேகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications