பாஜகவிற்கு இது சவாலான நேரம்.. சில நபர்களை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுக்கனும்.. அண்ணாமலை பேச்சு
கோவை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவைப் பற்றி மறைமுகமாக அண்ணாமலை பேசுகையில், அரசியல் மாற்றத்தின் அவசியத்தை நாம் பார்த்துள்ளோம். இது ஒரு சவாலான நேரம், நாம் பலரை எதிர்க்க வேண்டும் என்று தொண்டர்களிடம் தெரிவித்தார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக உடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜக கூட்டணியில் இருந்தும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த அதிரடி முடிவு குறித்து நேற்று மாலையே செய்தியாளர்கள் பலர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக தேசிய கட்சி என்றும், தங்கள் மேலிடம் இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில் பதில் அளிக்கும் என்றார்.
அதேநேரம் நேற்று இரவு பொள்ளாச்சியில் தனது 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரையின் போது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்ததை மறைமுகமாக குறிப்பிட்டு அண்ணாமலை பேசும் போது, தமிழக பாஜக சவாலான காலத்தை எதிர்கொள்கிறது என்றும் பலரை எதிர்க்க கட்சி தயாராக வேண்டும் என்றும் 'அரசியல் மாற்றத்தை' ஏற்படுத்த அனைத்து தடைகளையும் கடக்க தான் தயார் என்றும் கூறினார்.
கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில், தனி நபர்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நம்மை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளவும், இறுதியில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை உறுதிசெய்யவும் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
இதுபற்றி அண்ணாமலை பேசுகையில், 'நான் சில விஷயங்களைச் செய்யாமல் போனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும், நாம் இப்போது சவால்களை எதிர்கொள்ள வேண்டும், தடைகளை கடக்க வேண்டும், சில நபர்களை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றார்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications