பொய் சொல்வதில் திமுக தான் ’நம்பர் 1’! பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு! பாஜக அண்ணாமலை காட்டம்!
கோவை : பொய் சொல்வதில் போட்டி வைத்தால் திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இந்தியாவில் நம்பர் ஒன்றாக வருவார்கள் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர்," திமுகவில் உள்ள தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக சொன்னார்கள், திமுகவில் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் உள்ளதாக என சொல்கிறார்கள்.

அண்ணாமலை
முழுவதுமாக பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டு தான் ஆட்சிக்கு வந்தார்கள்,சொன்னதை செய்யவில்லை என்பதுதான் பாஜகவின் கேள்வி. வேறு மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது அங்கு சொல்லவில்லை. திமுக முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதை அமைச்சர்கள் உணர்ந்து கொள்ளாதவரை தமிழ்நாடு அரசியலில் கஷ்டம் தான். பொய் சொல்வதில் போட்டி வைத்தால் திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இந்தியாவில் நம்பர் ஒன்றாக வருவார்கள்,

திமுக அமைச்சர்கள்
அனைத்து மாநிலங்களிலிருந்து அமைச்சர்களை முன்னிறுத்தி யாரு மக்களிடம் அதிகமாக பொய் சொல்வது என்றால் திமுக அமைச்சர்கள் தான். மத்திய அரசு விலையை ஏற்றினார்கள் என்றால் ஒரு கடிதத்தை காட்ட சொல்லுங்கள் என தெரிவித்தார். யாரும் யாரையும் ஏற்ற சொல்லவில்லை. விண்டு எனர்ஜி, சோலார் முதல் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. பிஜிஆர் போன்ற பிரைவேட் நிறுவனத்தை ஆதரிக்க விலை ஏற்றம் நடைபெற்றுள்ளது. சாமானிய மக்களுக்கு விலை ஏற்றம் பெரிய பாதிப்பு.

பாஜக
வெள்ளை அறிக்கை ரிலீஸ் செய்யுங்கள் எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள் நஷ்டத்திற்கு காரணம் என்ன என்ற 20 பக்கத்தை விட்டால் மக்கள் கூட்டி கழித்தால் தெரிந்து விடும். எதுவும் செய்யாமல் தனியார் நிறுவனத்திற்கு பயன்படும் என்பதற்காக ஹோல் மூலமாகத்தான் செய்வோம் என்பது அபத்தம். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தையும் பிஜேபி மாநிலத்தையும் கம்பேர் செய்யாதீர்கள். பொய் சொல்லவே சில பேர் கோவை கிளம்பி வருகின்றனர். பொய் சொல்லவே அமைச்சர்கள் வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி நடைப்பயணம் மக்களுக்கு பொழுதுபோக்கு. காங்கிரஸ்காரர்கள் சண்டை போட்டால் வலது இடது என இடத்தில் நிறுத்திக் கொள்கிறார். நடை பயணத்தின் முடிவை நாம் பார்க்கிறோம் தேர்தலில். இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்து சுற்றித் திரிகிறார். ஆனால் அவருக்கு அது ஃபிட்டாக அமைந்துள்ளது. எச்சைஸ் ஆக அமைந்துள்ளது .கூட சென்ற காங்கிரஸ்காரர்களும் ஃபிட் ஆக உள்ளனர். மக்களுக்கு பயனில்லை. மத்திய அரசு 2023 வரைக்கும் ஏழைகளுக்கான உணவு 2 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு அதிகப்படுத்தி உள்ளனர்.

எதிர்க்கட்சி
83 கோடி மக்கள் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில் பயன் அடைகின்றனர். இதையாவது தமிழக அரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் வேண்டுகோள். போன வருஷம் கருப்பு கொடுத்தீங்க இந்த வருடம் கரும்பு கொடுக்கவில்லை. பனைவெல்லத்தை ஆரம்பிக்கிறோம் என்றீர்கள் ஆனால் பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றீர்கள். இன்னைக்கு நீங்கள் என்ன ஆயிரம் கொடுக்கிறீர்கள். ஆகவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு.

ஏ.வ. வேலு
ஏ.வ. வேலு ஏன் சக்கரை பொங்கல் கொடுக்கிறோம் என்றால் அப்போதுதான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என அபத்தமாக தெரிவிக்கிறார். இது அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார்கள். இந்த ஆட்சியில் ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் அரிசியும் சக்கரையும் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. போனவருடம் ஏன் வெள்ளம் கொடுத்தீர்கள் தெரியாது. ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஐயாயிரம் என்றீர்கள் சும்மா சொன்னோம். மக்கள் 2024 இல் முடிவுரை எழுதுவார்கள் திமுகவிற்கு" என்றார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications