தமிழ்நாட்டில் பாஜகவின் மேஜர் பிளான்.. லோக்சபா தேர்தல் குறித்து பேட்டியில் போட்டுடைத்த அண்ணாமலை
கோவை: கோவையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த பேட்டியை பற்றியும் பாஜகவின் வியூகம் குறித்தும் பார்ப்போம்.
இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக தனித்து களம் காண போகிறது பாஜக. இந்த தேர்தல் தமிழக பாஜகவின் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி என்பதை தாண்டி, இரட்டை இலக்ககத்தில் வாக்கு சதவீதம் பெற்றாலே அண்ணாமலைக்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

நோட்டா உடன் போட்டி போடும் கட்சி என்று அதிமுக, திமுக கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன. இந்நிலையில் 10 வருடமாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களம் கண்டு மாற்று என நிரூபிக்க விரும்புகிறது. ஆனால் களம் பாஜகவிற்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதால், எதிர்கொள்ள மற்ற மாநிலங்களில் மேற்கொண்ட வியூகங்களை தமிழகத்திலும் பயன்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலரை கட்சியில் சேர்த்தது. அதேபோல் தமிழ்நாட்டில் வியூகம் அமைத்து நிர்வாகிகளை சேர்த்து வருகிறது.
உதாரணத்திற்கு திமுகவின் கேபி ராமலிங்கம், காங்கிரஸில் இருந்து குஷ்பு, ஜோதிமணி போன்ற பல்வேறு முக்கிய தலைவர்களை சேர்த்தது. இன்னமும் பலரை அதிமுக மற்றும் திமுகவில் இருந்து சேர்க்க பாஜக விரும்புகிறது. வலிமையான கட்சி என்ற கட்டமைப்பை உருவாக்க பாஜக-வின் வியூகம் மிக கடுமையாக இருக்கிறது. வெறும் மேல் மட்ட நிர்வாகிகள் என்று இல்லாமல், கிராமங்களில், நகரங்களில் நடுத்தர வர்க்கத்தினரை அதிகம் கட்சியில் சேர்த்து வருகிறது. கட்சியில் சேருவோருக்கு ஏராளமான பொறுப்புகளை வாரி வழங்கி வருகிறது.
இந்நிலையில் கோவையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாஜகவை வெற்றி பெற வைக்க, சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதுபற்றி மேலும் அண்ணாமலை கூறும் போது, " எங்கள் கட்சியில் பெரிய புள்ளி மட்டுமல்ல.. நிறைய பேர் இணைய உள்ளார்கள். நாங்கள் சொல்லும் இடத்தில் அவர்கள் இணைவார்கள் என்பதில்லை. எங்கள் கட்சியில் இணையும் சிலருக்கு டெல்லி சென்று இணைய வேண்டும் என்று ஆசையும் இருக்கிறது.
அதேநேரம் எங்கள் கட்சியில் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். வெளியே மற்ற கட்சியில் இருந்தவர்கள் வரும் காரணத்தால், எங்கள் கட்சியில் இத்தனை ஆண்டுகள் இருக்கும் தலைவர்களை சமாதானம் செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் வருகிறவர்கள் மிகப்பெரிய ஆளாக இருக்கும் போது இவையெல்லாம் நிகழ்வது சாதாரணம்.
ஏனெனில் எங்கள் கட்சியில் இணைய வருபவர்கள் எம்எல்ஏவாகவோ, முன்னாள் எம்எல்ஏவாகவோ இருக்கலாம். இப்போது எங்கள் கட்சியில் இணைபவர்கள், தேர்தலில் நிற்கக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர்களாக உள்ளார்கள். அதனால் அவர்களுக்கான இடத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அவர்களை தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வந்தபிறகு அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்று கட்சித் தலைமை விரும்புகிறது.
பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருப்பதால், அதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காகவே முக்கிய புள்ளிகள் கட்சியில் இணையும் விழாவை ஒத்திவைத்துள்ளோம்.. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணையத்தான் போகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை நாங்கள் யாரையும் இணைய கூப்பிடவில்லை. அவர்களாகவே வந்து கட்சியில் இணைகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றி பெற வைக்க, சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம்" என்றார்.
-
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications