தமிழகத்திலேயே முதல் முறை.. கோவை உக்கடம் குளத்தில் என்ன மிதக்குது பாருங்க.. சூப்பர் முயற்சி
கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாநகரம் உக்கடம் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்க விட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மின்தகடு (சோலார் பேனல்) பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் தமிழகத்திலேயே முதல் முதலாக உக்கடம் பெரியகுளத்தில் சோலார்பேனல்களை மிதக்கவிட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தார்கள். அதற்கான முயற்சியை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

அந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சோலார் மூலம் மின்சாரம் எடுக்க குளத்துக்குள் சோலார் பேனல்களை மிதக்க விடும் பணி நடந்து வந்தது. தற்போது உக்கடம் குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் நங்கூரம்(ஆங்கரிங் மெத்தடு) முறையில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டு உள்ளது.
அதை கண்காணிக்கவும், அவற்றை யாரும் சேதப்படுத்தி விடுவதை தடுக்கவும் அங்கு இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் உக்கடம் குளத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் வருகிறார்கள்.
குளத்தின் உள்பகுதியில் தண்ணீரில் சோலார் பேனல்கள் மிதந்தபடி இருப்பதை உக்கடம் மேம்பாலத்தில் இருந்து பார்க்க முடியும்.. தமிழகத்திலேயே தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கும் முதல் பணி இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, கோவை மாநகராட்சியும், ஜெர்மன் நாட்டு நிறுவனமும் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரம் எடுக்கும் பணி நடக்கிறது. இதன் மூலம் 154 கிலோ வாட் மின்சாரத்தை தினமும் எடுக்க முடியும். உக்கடம் குளத்தில் நங்கூரம் முறையில் சோலார் பேனல்கள் தண்ணீரில் மிதக்கவிட்டுள்ளோம். இதன் காரணமாக குளத்தில் தண்ணீர் குறையும்போது சோலார் பேனல்கள் தானாகவே கீழே சென்றுவிடும். தண்ணீர் அதிகரிக்கும்போது தானாக மேலே வந்துவிடும். எக்காரணத்தைக்கொண்டும் தண்ணீரில் மூழ்கவே மூழ்காது. காற்று வீசும்போது, குளத்தில் அலை அடித்தாலும் சோலார் பேனல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
உக்கடம் குளத்தில் சோலார் மூலம் தயாரிக்கப்படும் 154 கிலோ வாட் மின்சாரமும் மின்சாரத்துறைக்கு கொடுக்கப்படும். இதற்காக இந்த பகுதியிலேயே மின்மாற்றியும் வைக்க உள்ளோம். முன்னதாக நர்மதை ஆற்றில் இதுபோன்று சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு தற்போது தமிழகத்தில் கோவை உக்கடம் குளத்தில்தான் முதல் முறையாக தண்ணீரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இன்னும் 2 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications