"பழி".. கும்பிட்டபடியே வந்த அண்ணாமலை.. கார் வெடித்த கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விசிட்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வந்தார். கும்பிட்டபடியே கோவிலுக்கு வந்த அவர்.. அங்கு வழிபாடு செய்துவிட்டு பின்னர் கோவில் பூசாரிகளிடம் கார் வெடிப்பு குறித்து விசாரித்தார்.
கடந்த தீபாவளிக்கு முதல்நாள் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்த தீவிரவாதி முபின் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை நடத்த என்ஐஏவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து நேற்று இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது.

அண்ணாமலை
இந்த வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு மீதும், போலீசார் மீதும் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். முன்னதாக இந்த கார் வெடிப்பில் போலீசார் தகவல்களை வெளியிடும் அண்ணாமலை பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அவரின் பேட்டிகள் சில சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதத்தில் திமுகவினர் குற்றஞ்சாட்டினர். அதில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள்.

குற்றச்சாட்டு
ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு போலீஸ் கோட்டை விட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். போலீஸ் இதில் துரிதமாக செயல்படவில்லை. என்ஐஏ இதை உடனே விசாரிக்க வேண்டும். நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார். அவரின் இந்த பேட்டி சர்ச்சையானது.

அண்ணாமலை வருகை
இந்த நிலையில்தான் கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை வந்தார். கும்பிட்டபடியே கோவிலுக்கு வந்த அவர்.. அங்கு வழிபாடு செய்துவிட்டு பின்னர் கோவில் பூசாரிகளிடம் கார் வெடிப்பு குறித்து விசாரித்தார்..இன்று கோவையில் பாஜக சார்பாக பந்த் நடத்தப்படும் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

பந்த்
ஆனால் பந்த்திற்கு மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார். இந்த நிலையில்தான் இன்று அவர் கோவிலுக்கு சென்று பார்வையிட உள்ளார். அங்கு அண்ணாமலை வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். உள்ளே பூசாரிகளிடம் நீண்ட நேரம் அண்ணாமலை ஆலோசனை செய்தார். போலீசார் நடத்திய விசாரணை பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார்.

சர்ச்சை
முன்னதாக அண்ணாமலை வைத்த புகார்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அளித்த விளக்கத்தில், திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே தமிழ்நாடு அரசுக்கு எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. இது பொய்யான பழி. அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். அது உண்மை கிடையாது, என்று கூறி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications