பாலியல் தொல்லையால் கோவையில் +2 மாணவி தற்கொலை.. முதன்மைக் கல்வி அலுவலருக்குப் பறந்த முக்கிய உத்தரவு
கோவை: ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கத் தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது,
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்,

கோவை மாணவி
கடந்த சில நாட்களாகவே இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மிதுன் சக்ரவர்த்தி தந்தே பாலியல் தொல்லையே இதற்குக் காரணம் என்றும் இதனால் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த மாணவி 6 மாதமாக மன உளைச்சலில் தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கக் கோவை முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது குறித்து வரும் 23ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி கடிதம்
அந்த மாணவி உயிரிழக்கும் முன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலியல் தொல்லை அளித்த இயற்பியல் ஆசிரியராக மிதுன் சக்ரவர்த்தி வேறு சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Recommended Video

போக்சோ வழக்கு
மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாணவி புகார் அளித்த பின்னரும், அலட்சியமாக இருந்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரா ஜாக்சனிடம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த போலீஸ் விசாரணையில் பல முக்கிய வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications