தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் & உதவியாளருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி
கோவை: தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ.சாமிநாதன். இவரது உதவியாளராக செல்லமுத்து என்பவர் உள்ளார். 53 வயதாகும் செல்லமுத்துவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் செல்லமுத்துவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செல்லமுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர் என்பதால் அமைச்சருக்கும் கடந்த 14ஆம் தேதி இரவு கொரோனா சோதனை செய்யப்பட்டது.
அதில் அமைச்சர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அமைச்சர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அமைச்சருக்கு லேசான அளவிலேயே பாதிப்பு உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது ட்விட்டரில், 'காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான மு. பெ. சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். மு. பெ. சாமிநாதன் விரைவில் முழுமையாக நலம் பெற்று மக்கள் பணியைச் சிறப்புடன், தொடர வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நல்வாய்ப்பாக அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications