சட்டென சொன்ன மின்சார வாரியம்.. கரண்ட் பில் நீங்க கட்டணுமா? இனிமேல் ரொம்ப ஈசி.. தமிழக மின்துறை அதிரடி
கோவை: கரண்ட் பில் கட்டுவதில், வாடிக்கையாளர்களின் வசதிகளை தமிழக அரசு அதிகப்படுத்தி வருகிறது.. அதன்படி, இப்போதும் ஒரு சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.
கரண்ட் பில் கட்டுவதை, தமிழக மின்வாரியம் எளிதாக்கி தந்திருக்கிறது.. பெரும்பாலானோர், ஆன்லைனில் கட்டணத்தை கட்டிவிடுகிறார்கள். எனினும், சில சமயம், ஆன்லைனில் கட்டினாலும், சிக்கல்கள் வந்துவிடுகின்றன..
அதனால்தான், வாடிக்கையாளர்கள் நேரடியாக EB ஆபீசுக்கு சென்று கட்டும் நிலைமை தொடர்கிறது. இதற்கு ஒரு தீர்வை தர வேண்டும் என்பதற்காகவே, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் வகையில் PoS இயந்திரங்களின் பயன்பாடு மின்வாரிய அலுவலகங்களில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே அமல்படுத்தப்பட்டது.

கட்டண வசூல்: மின் கட்டண வசூல் மையங்களில் ஸ்வைப்பிங் மிஷின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவையை அப்போதைய மின்துறை அமைச்சர் தங்கமணி காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்திருந்தார்.. மேலும், தமிழகம் முழுவதும் 3,000 மின்வாரிய அலுவலகத்தில் ஸ்வைப்பிங் மிஷின் திட்டம் துவக்கப்படும் என்றும் தங்கமணி அப்போது உறுதி தந்திருந்தார். ஆனால், டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் வகையில் Pos இயந்திரங்களை பயன்படுத்தும் வசதியானது, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்துடன் நின்றுவிட்டது.
இதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்சமயம், இதே சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.. அதன்படி, கோவையில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மண்டல மேற்பார்வை பொறியாளருக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவு: அந்த உத்தரவில், "கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் வசூலிக்க ஸ்வைப்பிங் மெஷின்கள் பயன்படுத்தப்படும். ஆனால், ஒரு கலெக்ஷன் கவுண்ட்டர் அல்லது ஒரே இடத்தில் பல கலெக்ஷன் கவுண்ட்டர்கள் என இரண்டில் எப்படி இருந்தாலும் ஒரே ஒரு ஸ்வைப்பிங் மெஷின் தான் தற்போதைக்கு வழங்கப்படும்.
கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மெட்ரோ, உடுமலைப்பேட்டை, திருப்பூர், பல்லடம், நீலகிரி என 7 பகுதிகளின் கட்டண வசூல் மையங்கள் இருக்கின்றன.
கட்டண வசூல்: பிரிவு அலுவலங்களை பொறுத்தவரை கோவை வடக்கு 51, கோவை தெற்கு 54, கோவை மெட்ரோ 54, உடுமலைப்பேட்டை 49, திருப்பூர் 54, பல்லடம் 64, நீலகிரி 39 என காணப்படுகிறது. இவற்றில் ஒரே ஒரு கட்டண வசூல் மையம் என எடுத்துக் கொண்டால் கோவை வடக்கு 42, கோவை தெற்கு 40, கோவை மெட்ரோ 48, உடுமலைப்பேட்டை 33, திருப்பூர் 28, பல்லடம் 44, நீலகிரி 29 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளது
அதுவே ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வசூல் மையங்கள் என்று எடுத்தால் கோவை வடக்கு 4, கோவை தெற்கு 6, கோவை மெட்ரோ 3, உடுமலைப்பேட்டை 4, திருப்பூர் 11, பல்லடம் 7, நீலகிரி 4 என இருக்கின்றன. கோவை மண்டலத்தில் ஸ்வைப்பிங் மெஷின் சேவையை தடையற்ற முறையில் வழங்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை ஐடி விங் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி நிம்மதி: மின்சார அலுவலகங்களில் ஸ்வைப்பிங் மெஷின்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும், விரிவடைய உள்ளதால், பொதுமக்களுக்கு கரண்ட் பில் கட்டுவது இனிமேல் எளிதாகும் என்றும் நம்பப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications