நான்தான் நிப்பேன் தள்ளி நில்லு.. செந்தில் பாலாஜியின் பின்னால் நிற்க திமுக நிர்வாகிகள் தள்ளுமுள்ளு

Subscribe to Oneindia Tamil

கோவை: 15 மாதங்களுக்குப் பிறகு கோவை மாவட்டத்துக்கு வந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருக்கைக்கு பின்னால் யார் நிற்பது என்பது தொடர்பாக திமுக நிர்வாகிகள் மத்தியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவையிலும் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

rain senthil balaji


அந்த வகையில், கோவையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாயிபாபா காலனி, லாலிரோடு, சங்கனூர் சாலை, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சிங்காநல்லூர் அருகே கதிரவன் கார்டன் பகுதியின் அருகில் உள்ள சங்கனூர் ஓடையிலிருந்து வெளியேறிய தண்ணீர் தெருக்களில் புகுந்ததால் வீடுகளுக்கு முன்பு சேரும், சகதியுமாக காட்சியளித்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சங்கனூர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் , மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனை கூட்டம் அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பதற்காக ஏற்பாடுகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்யப்பட்டு இருந்தன.

அமைச்சர் வருவதற்கு முன்பு இருக்கைகள் போடப்பட்டன. அமைச்சரின் பின்பு யார் நிற்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறையில் இருந்து 15 மாதங்கள் கழித்து செந்தில் பாலாஜி கோவை வந்துள்ள நிலையில் அவர் இருக்கையின் பின்பு யார் நிற்பது என்பதில் திமுக நிர்வாகிகள் மத்தியில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

முதல் தளத்திலிருந்து செந்தில் பாலாஜி கீழ் தளத்திற்கு வந்த போது தொண்டர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டர்களை விலக்கிவிட்டு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க உதவி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+