பாஜகவின் மதவெறி அரசியலின் முதல் களப்பலி பூர்ணசந்திரன்.. என்னவெல்லாம் செய்ய போகின்றனரோ - திருமா வேதனை
கோவை: திருப்பரங்குன்றத்தில் உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு, அரசு வேலையும் வழங்கி ஆதரிக்க வேண்டும். இது பாஜகவின் மத வெறி அரசியலுக்கு இது முதல் களப்பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகின்றனரோ என்ற கவலை மிஞ்சுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தை முற்றாக அழிக்க மத்திய அரசி முடிவு செய்துவிட்டது. அதில் காந்தியின் பெயரை அந்த திட்டத்தில் இருக்க கூடாது என முடிவு செய்துவிட்டது. பாஜகவின் அரசியல் தரம் தாழ்ந்து இருக்கின்றது என்பதற்கு இதைவிட உயர்ந்த உதாரணம் தேவை இல்லை.

பாஜக பொறுப்பேற்ற நாளில் இருந்து காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக இருக்கின்றனர். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என கொண்டாடுகின்றனர். இந்த திட்டத்திற்கு ஜி ராம் ஜி என்று பெயர் சூட்டி இருக்கின்றனர். ஹே ராம் என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கி இருக்கின்றனர்.
காந்தியடிகளின் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.
100 நாள் வேலை திட்ட விவகாரம்
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 100 நாள் வேலை ஒருவருக்கு கூட கிடைக்க வில்லை. ஆனால், இப்போது 125 நாள் என உயர்த்தி இருப்பதாக ஏமாற்றுகின்றனர். இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகம் முழுவதும் வரும் 24 ஆம் தேதி இதை கண்டித்து ஒன்றிய வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றது.
ஏற்கனவே இடதுசாரிகளும் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து 23 போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். தற்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளும் இணைந்து 24 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்து இருக்கிறோம். 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்க இருக்கின்றனர். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கின்றேன்.
மாவட்ட செயலாளர்கள் நியமனம்
விரைவில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என 234 மாவட்ட செயலாளர்கள் என நியமிக்க இருக்கின்றோம். அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகளும் வழங்கப்படும். மாவட்ட செயலாளர் நியமனத்திற்கு பின்பு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவோம்.
100 நாள் வேலை திட்டத்தில் 40% மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும் என உள்நோக்கத்துடன் சொல்லி இருக்கின்றனர். இந்த திட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை சொல்லி இருக்கின்றனர். இந்த திட்டத்தின் மீது அவ்வளவு காழ்ப்புணர்வு அவர்களுக்கு இருக்கின்றது.
நாடு முழுவதும் சமஸ்கிருத மயமாக்குதல், இந்துத்துவ மயமாக்குதல் ஆகியவற்றில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது. கார்ப்பரேட் மயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். மோடி ஆட்சியில் அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்கி கொண்டு இருக்கின்றனர். அவர்கள் பேசும் தேசியவாதம் தனியார் மயமாதலை போன்று தான் இருக்கின்றது.
அயோத்தி, திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை கண்டிக்கும் வகையில் 22 ம் தேதி எனது தலைமையில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும். தொழில் துவங்கும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும், தொழில் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்த வகையில் மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் இறந்த பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கும் நிகழ்வு. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு, அரசு வேலை வாய்ப்பை வழங்கி ஆதரிக்க வேண்டும். பாஜகவின் மத வெறி அரசியலுக்கு இது முதல் களப் பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகின்றனரோ என்ற கவலை மிஞ்சுகிறது என்றார்.
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications