கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு.. கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
கோவை: கோவை கல்லூரி மாணவியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சுட்டுப் பிடித்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வெளியூரைச் சேர்ந்த 20 வயதான அவர், கோவை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ஒண்டிப்புதூரில் உள்ள 25 வயது இளைஞர் அவரின் ஆண் நண்பராக உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் அருகில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடினார்கள். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரின் ஆண் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், குணா, கார்த்தி ஆகிய 3 இளைஞர்களை வெள்ளகிணறு பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். அவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக மகளிர் ஆணையத் தலைவர் குமாரியும் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ள மூன்று பேரிடம் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் இன்றஉ நேரில் விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் 3 நபர்களுடன் விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தவசி, கருப்பசாமி , காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு பொது பிரிவிற்கு மாற்றப்பட்டனர். மூன்று பேரையும் மருத்துவமனையில் நேரில் விசாரித்த கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற ஜேஎம் 2 நீதிபதி அப்துல் ரகுமான், மூவரையும் வரும் 19 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறை பிரிவிற்கு மாற்றப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications