திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு
Recommended Video
கோவை: திடீரென தங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக சாலையில் நின்ற அந்த 2 திருநங்கைகளை பார்த்ததும் பொதுமக்கள் திடுக்கிட்டு போனார்கள்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
சமையல், குடிசைத் தொழில் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு சமூகத்தில் கௌரவமாக பலர் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு சிலர் தனியார் நிறுவனங்கள்,கடைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பணம் வசூலித்தும் வருகின்றனர்.

வாக்குவாதம்
இந்த சூழலில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் வளாக துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இரு திருநங்கைகள் வந்திருந்தனர். அப்போது விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் நீண்ட நேரமாக பணம் கேட்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

பணம் பறிப்பு
அவர் பணத்தை தராத காரணத்தினால், அவரது சட்டைப்பைக்குள் கையை விட்டு இருந்த 10,000 ரூபாயையும் பறித்து கொண்டனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர், அந்த திருநங்கையரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அந்த திருநங்கைகள் திடீரென தங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக சாலையில் நின்றனர்.

அதிர்ச்சி
இது அத்தனையும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றதால், அதிர்ச்சி அடைந்ததுடன், முகம் சுளிக்கவும் வைத்தது. ஆனால் அந்த நபர் விடாமல் தனது பணத்தை தருமாறு கேட்டு கொண்டே இருக்கவும், கடைசியாக எடுத்த பணத்தை திருநங்கையர் திரும்ப கொடுத்தனர்.

அத்துமீறல்
தமிழகத்தின் பல பகுதிகளில் திருநங்கைகள், சமூகத்தில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள், முயன்று படிக்கிறார்கள், தங்களை இந்த சமூகத்தில் போராடி நிலைநிறுத்தி வருகிறார்கள். இருந்தாலும், இது எல்லாவற்றையும் இழிவுபடுத்துவது போல ஒரு சிலர் இப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது சங்கடத்தையும், கவலையையும் தந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications