கோவையில் பறை இசைக் கலைஞரை மறுமணம் செய்த உடுமலை கவுசல்யா
Recommended Video

கோவை: கோவையில் பறை இசைக் கலைஞரை கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்டார்.
உடுமலையை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு சங்கர் என்பவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை மீறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதி உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் கவுசல்யாவின் பெற்றோர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து சங்கரை கொன்றவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என இறுதி வரை போராடினார் கவுசல்யா. அதில் வெற்றியும் கண்ட அவர் தந்தை உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை பெற்று தந்தார்.

இசை கலைஞர்
தொடர்ந்து ஆணவக் கொலைகளுக்காக போராடி வந்த அவர் கோவைச் சேர்ந்த இளைஞர் சக்தியை மறுமணம் செய்தார். அவர் பறை இசை கலைஞர் ஆவார்.
[அதிர வைத்த பறை.. ஓங்கி ஒலித்த இசை.. இது கவுசல்யா வாழ்வின் போராட்ட கீதம்! ]

காதல் திருமணம்
இவர்களது திருமணம் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலககமான பெரியார் படிப்பகத்தில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா.

விடுதலை சிறுத்தைகள்
கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர்
சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவி சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும் , பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களிலும் செயற்பாட்டளாராக இருந்து வருகிறார் கவுசல்யா. சக்தி, பறையிசையை பரவலாக்க நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications