உக்கடம் மேம்பாலத்தில் வந்த மேஜர் மாற்றம்.. பட்டனெ நடக்கும் விஷயம்.. கோவை மக்களே இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உக்கடம் மேம்பாலத்தில் இப்போது மிக முக்கிய மாற்றம் நடந்துள்ளது. இது கோவை நகரின் தலைவலியாக மாறியுள்ள டிராபிக் சிக்கலை ஓரளவுக்குக் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கோவை நகரில் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையைப் போல மின்சார பேருந்துகள், மெட்ரோ ஆகியவை கோவையில் இல்லை. பொது போக்குவரத்து என்றாலே பேருந்து மட்டும் தான் இருக்கிறது.

coimbatore traffic

இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அங்கே எடுத்து வருகிறது..

உக்கடம் மேம்பாலம்: குறிப்பாக உக்கடம் சாலையில் ஒரு மேம்பாலத்தையும் அவினாசி சாலையில் ஒரு மேம்பாலத்தையும் கட்ட முடிவு செய்தது தமிழ்நாடு அரசு. இதில் உக்கடம் மேம்பாலம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதற்கிடையே இந்த மேம்பாலத்தில் இப்போது மிக முக்கிய மாற்றம் நடந்துள்ளது.

அதாவது உக்கடம் மேம்பாலத்தை வாலாங்குளம் சாலையுடன் இணைக்கும் வளைவில் சோதனை முறையில் போக்குவரத்து தொடங்குகிறது. இதற்கான அனுமதியை மாநில நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது.

வாலாங்குளம்: இந்த மேம்பாலத்தைக் கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பிரதான ரதவீதி மற்றும் பிற வளைவுகளில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. அதேநேரம் உக்கடம் மேம்பாலத்தை வாலாங்குளம் சாலையுடன் இணைக்கும் வளைவில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால்.. அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்படாமல் இருந்தது.

அங்கு ஜங்ஷன் வேலைகள் மற்றும் பெயின்டிங் நடந்து வருகிறது. இன்று அல்லது நாளை இந்த வளைவில் சோதனை ஓட்டம் அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.. இதன் மூலம் மேம்பாலம் பணிகள் முழுமையடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2.2 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம் மொத்தம் ₹481.95 கோடி செலவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவினாசி மேம்பாலம்: அவினாசி ரோடு மேம்பாலம் பணி குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் பிரதான பாதையைத் திறக்க திட்டமிட்டுள்ளோம். உப்பிலிபாளையத்தில் இருந்து 10.1 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1,621 கோடி செலவில் பாதை அமைக்கப்படுகிறது. இது நான்கு உயர்த்தப்பட்ட வழிச்சாலையாக இருக்கும். மொத்தம் 304 தூண்கள் இந்த மேம்பாலத்தில் திட்டமிட்டுள்ளது. அதில் 50 தூண்கள் இன்னும் அமைக்கப்பட வேண்டும்.

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். ஹோப் கல்லூரி அருகே 52 மீட்டர் ஸ்டீல் ஸ்பான் முழுவதுமாக கான்கிரீட் மற்றும் பிடுமன் டாப்பிங் மூலம் முடிக்க மூன்று மாதங்கள் ஆகும். நவ இந்தியா சந்திப்பில் ஒரு தூண் அமைக்கும் பணி மட்டும் மீதமுள்ளது. இப்போது அங்கே மின் கம்பிகளை மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணிகள்: இந்த அவினாசி ரோடு மேம்பாலத்துக்கான ரேம்ப் அமைக்கும் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. எட்டு வளைவுகளில் ஏழு வழித்தடங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் விமான நிலையம் அருகே லிஃப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+