வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த வேன்! எப்படி நடந்தது? ஆட்சியர் விளக்கம்
கோயம்புத்தூர்: வால்பாறையில், 13வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 பேர், கடந்த 15ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். டிரிப் முடித்துக்கொண்டு, நேற்று மாலை பொள்ளாச்சி வழியாக சொந்த ஊர் செல்வதற்காக வேனில் வந்துக்கொண்டிருந்த போது, வால்பாறை மலைப்பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில், வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "நேற்று மாலை 5 மணியளவில், வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில் கேரள மாநில பதிவெண் கொண்ட வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் 8 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தம் 13 பயணிகள் இருந்தனர். விபத்து நடந்ததை அறிந்த தீயணைப்புதுறையினர், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் உடனுக்குடன் மீட்பு பணியை தொடங்கினர்.
ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு வைத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். நேற்றிரவு 7 பெண்கள் 2 ஆண்கள் என 9 பேர் உயிரிழந்தனர். இன்று பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஒரு பயணி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே, இரு மாவட்ட ஆட்சியர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களை சொந்த ஊர் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்திருக்கிறேன். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவில்தான் விபத்துக்கான காரணம் தெரியும்" என்று கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications