பாஜக மீதான வயிற்றெரிச்சலில் திமுக.. விஸ்வகர்மா திட்டம் குறித்து பொய் பிரசாரம்.. வானதி குற்றச்சாட்டு
கோவை: விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டால் பிரதமருக்கும், பாஜகவுக்கும் நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்கின்ற வயிற்று எரிச்சலால் சமூக நீதிக்கு எதிரானது என திமுகவினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். முற்றிலும் சமூக நீதிக்கு எதிராக ஒரு கட்சி இருக்க முடியும் என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், சிவானந்தா காலனி டாடா பாத் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தையல் தொழில் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்தவர்கள் அல்ல. அனைத்து சமூகத்தினரும் தையல் தொழிலை செய்து வருகின்றனர்.

விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று உண்மைக்கு சற்றும் பொருத்தம் இல்லாத தகவலை மாநிலத்தின் முதலமைச்சர் தெரிவித்து வருகிறார். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும், சமூக நீதி எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. சமூக நீதி பாதிக்கப்படும் என்கின்ற பொய்யை கூறி லட்சக்கணக்கான கைவினை கலைஞர்களின் வாழ்வை முடக்கப் பார்க்கிறார் முதலமைச்சர்.
கேரளா மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கெல்லாம் முதற்கட்ட ஊக்கத்தொகை பெற்று பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். அடுத்த கட்ட பயிற்சிகளை பெற்று 15 ரூபாய்க்கான இலவச உபகரணங்களை பெற்று முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய் கடன் கொலாடிரல் பெற்றுள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில் விஸ்வகர்மா திட்டத்தின் பயனை பெற்று வருகின்றனர். ஆனால், கோவையில் பெற முடியவில்லை. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது ஆன்லைன் வாயிலாக யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என பிரதமர் அறிவித்திருந்தார். இந்த சான்றிதழ் பெற வேண்டும் அந்த சான்றிதழ் பெற வேண்டும் என கூறவில்லை.
மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் யார் கட்சிக்காரர்களோ, யார் அதிகாரம் படைத்தவர்களோ அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்கள் யார் பலன் பெற வேண்டுமோ அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அவர்கள் அந்த குறிப்பிட்ட தொழிலை செய்கிறார்களா என்பதை அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய நபர்கள் குழுவாக இருந்து முடிவு செய்வார்கள்.
இதில் எங்கு தவறு வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆளுங்கட்சிக்காரர்கள் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள். அதனால்தான் இப்படி ஒரு வெளிப்படையான திட்டம் பயன்படுத்தப்படுவதை திமுக அரசு விரும்பவில்லை. சமூகநீதி பேசும் மாநிலத்தின் முதல்வர் ஏன் உங்கள் மகனுக்கு மட்டும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்.
ஏன் எல்லோருக்கும் சமூக நீதி கொடுக்கிறோம் எனக் கூறுபவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்கலாமே. அப்போது உங்கள் சமூக நீதி எங்கே போயிற்று?. உலகிற்கே உதாரணமான பல பாரம்பரிய கலைகளோடு தமிழகத்தில் எங்கு சென்றாலும் பெருமை சேர்க்கும் கைவினை கலைஞர்களுக்கு வயிற்றில் அடிக்கும் வேலையை திமுக அரசு செய்கிறது.
விஸ்வகர்மா திட்டம் மத்திய அரசு என்ன வழிகாட்டு நெறிமுறைகள் கொடுத்துள்ளார்களோ அதன்படி செயல்படுத்த வேண்டும். இதற்காக பாஜக கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் ..இந்த மாதிரி முடிவுகளை எடுத்துள்ள மாநில முதல்வரின் செயலுக்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. மேற்கொண்டு இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகியவை நடத்துவது குறித்து மாநில தலைமையோடு பேசி முடிவு செய்யப்படும்.
சமூக நீதியை கபட நாடகம் போல செய்து கொண்டிருக்கிறது இந்த அரசு. சாதிவாரி கணக்கெடுப்பை இவர்களால் செய்ய முடியும். ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள். இது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. விஸ்வகர்மா திட்டம் பிரதமருக்கும், பாஜகவுக்கும் நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்கின்ற வயிற்று எரிச்சலில் சமூக நீதிக்கு எதிரானது என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். சமூக நீதிக்கு எதிரான ஒரு கட்சி இருக்கும் என்றால் அது திமுகதான். அவர்கள் செய்வது வெறும் வார்த்தை ஜாலம்தான், பிதற்றல்தான். அங்கு உண்மையான சமூக நீதி கிடையாது.
I am sorry ஐயப்பன் பாடல் சர்ச்சை விவகாரம் குறித்து பேசுகையில், யாருடைய வழிபாட்டு தெய்வமாக இருந்தாலும், அது எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தாழ்வு செய்கின்ற வகையில் நடந்து கொள்வது சட்ட ரீதியில் தவறு. ஆனால், திமுக அரசு அவர்களைப் போற்றி அவர்களது வழியில் யாராவது செய்தால் நடவடிக்கை எடுக்காது. இரவில் ஏதாவது கமெண்ட் போட்டால் தீவிரவாதிகள் போல தூக்கிச் செல்வார்கள்.
வானிலை மையம் அவர்களுக்கு இருக்கக்கூடிய கருவிகளை வைத்து கணிப்புகளை கொடுக்கின்றனர். வானிலை மாற்றம் என்பதை சில சமயங்களில் கருவிகள் கூட கணிக்க முடியாது. நம் ஊரில் பழமொழி கூட உண்டு. மழை பேரும் புள்ள பேரும் மகேசனுக்கு கூட தெரியாது என்று. சில சமயங்களில் வானிலை என்பது உபகரணங்களால் கூட கணிக்க முடியாமல் கூட இருக்கும்.
மழைக்காலத்தில் கோவையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. மழைக் காலங்களில் முடியட்டும் சாலை போடுகிறோம் என்கிறார்கள். இன்று பல விபத்துக்கள் சாலை மோசமாக உள்ளதால் நடந்து கொண்டிருக்கின்றன. ஈவிகேஎஸ் இளங்கோவன் நல்லபடியாக அவர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications