கேரளாவில் தொடர் கொலைகள்.. என்ஐஏ விசாரிக்கனும் - கோரிக்கை வைக்கும் வானதி சீனிவாசன்
கோவை: கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கேரளாவில் அடுத்தடுத்து இரு முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. கேரள எல்லையையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் நடந்துள்ள பாஜக பிரமுகரின் கொலை அரசின் ஆதரவோடு நடந்துள்ளது எனவும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் , பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திமுகவினர் மீது வானதி புகார்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு பிறகு அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் காயர் தொழிற்சாலைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆளும் கட்சியின் பெயரை பயன்படுத்தி குறிப்பாக அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு வசூல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வருவதாக தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் கட்டாய வசூல்
திமுகவினரின் கட்டாய வசூல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்க தயங்குவதாக கூறிய வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

விலக்கு அளிக்க வேண்டும்
மேலும் ஜனவரி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12% ஜி.எஸ்.டி அதிகரிப்பதாக ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு விலக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டு கொள்வதாக கூறிய வானதி சீனிவாசன், இது தொடர்பாக மத்திய மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம் எனவும் கூறினார்.

கேரள அரசு மீது புகார்
கேரளா பாஜக ஓபிசி பிரிவு செயலாளர் படுகொலை பற்றி பேசிய அவர் , கேரளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்க கூடிய குழுக்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் தற்போது படுகொலை நிகழ்ந்து வருகிறது. எனவும், இந்த படுகொலைகளை NIA விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றும், இந்த கொலைகளை அந்நிய நாட்டில் திட்டமிட்டு செய்யப்பட கூடிய படுகொலைகளாக நாங்கள் பார்ப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications