வெள்ளியங்கிரி மலையில் மூச்சு பேச்சின்றி கிடந்த இளைஞர்.. வனத்துறை மேலும் மேலும் அதிர்ச்சி
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பௌர்ணமியை ஒட்டி நேற்று வெள்ளியங்கிரி மலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலை ஏற்றம் அனுபவம் மிகவும் அழகானது. ஆனால் கடுமையான அனுபவம் என்பதால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பங்களும் நடக்கின்றன. வெள்ளியங்கிரி மலை சென்ற இளைஞர் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த காலகட்டத்தில் பக்தர்கள் மலையேறி சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யலாம். இதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வருவது வழக்கம். இதில் அவ்வபோது துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அரங்கேறும்.

வெள்ளியங்கிரி மலை இறப்பு
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் ஒரு நபர் இன்று அதிகாலை சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். அங்கிருந்த பக்தர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். அவர் சுயநினைவின்றி இருந்ததால் பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் மருத்தவக் குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஏழாவது மலை சென்று அவரை பரிசோதனை செய்தனர். அதில் அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்தது.
சுமை தூக்கும் தொழில்கள் மூலம் டோலி பயன்படுத்தி அவரின் உடலை பூண்டி அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த நபரிடம் பரிசோதனை செய்ததில் அவரிடம் எவ்வித ஆவணங்கள், அடையாள சான்றிதழ்கள் இல்லை என்று தெரியவந்தது. அவருடன் வேறு எந்த நபரும் உடன் வரவில்லை என்றும் தெரியவந்திருக்கிறது. உயிரிழந்த நபருக்கு சுமார் 35 வயது இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்தாண்டு 7 பேர் மரணம்
அவரை அடையாளம் கண்டு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கும் பணியில் ஆலந்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளியங்கிரி மலையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு மட்டும் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications