கோவை: இறுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்கள்.. வெடித்த சர்ச்சை.. மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், தந்தை பெயர் இந்தியில் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 15,31,448 வாக்களர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

voters name and fathers name were in Hindi in the final voter list In coimbatore

இந்த நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வார்டு எண் 69-ல் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயரும், அவரது தந்தையின் பெயரும் இந்தியில் வெளிவந்ததால் வாக்காளர்கள் குழம்பியுள்ளனர். சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது அந்த வாக்காளர் பட்டியலில் மட்டும் பெயர் என்று தமிழில் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் இந்தியில் பெயர் உள்ளது.

இதேபோல் மற்றவை பெயர் என்று தமிழில் குறிப்பிட்டு இருக்கும் இடத்திலும் இந்தியில் பெயர் உள்ளது. இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரு தரப்பு விளக்கங்களை கொடுத்துள்ளனர். இது கணினி தொடர்பான தவறுதலாக இருக்கலாம். கணினி மூலம் இந்த தவறு ஏற்பட்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தவறு எங்கு நிகழ்ந்தது என்று விசாரித்து கண்டறியப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில் இந்தி இருப்பது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்து எப்படி வந்தது? இது கணினியின் தவறாகவே இருந்தாலும் அதிகாரிகள் ஏன் இதை முன்கூட்டியே கண்டறியவில்லை? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தயாரித்த அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் தடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+