Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை பீளமேட்டில் வந்து போன காதலன்.. தனியார் விடுதியில் இளம் பெண் இருந்த கோலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையை பொறுத்தவரை ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதில் பலர் படிக்கிறார்கள் அதேபோல் கம்பெனிகள், தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். இவர்களில் பலர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஆவார். எனவே அறை எடுத்து தங்கித்தான் வேலை செய்கிறார்கள். அப்படித்தான் நீலகரி மாவட்டத்தைச்சேர்ந்த 21 வயது இளம் பெண் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அறை எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார்கள். கோவையில் பலர் சரவணம்பட்டி, பீளமேடு பகுதியில் பிஜி எனப்படும் ஹாஸ்டலில்களில் தங்கி பணியாற்றுகிறார்கள். சிலர் தனியார் விடுதிகளிலும் தங்கி பணியாற்றுகிறார்கள். குறிப்பாக பல பெண்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றுகிறார்கள். அப்படி பணியாற்றும் பெண் ஒருவர், காதல் தகராறில் தவறான முடிவெடுத்துள்ளார்.

What decision did the young woman make after her boyfriend came and went in Coimbatore

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கோவை மாநகரில் உள்ள பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு தங்கியிபடி அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இளைஞர் இளம்பெண்ணை பார்ப்பதற்காக நேற்று மாலை பீளமேட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த இளைஞரும், இளம்பெண்ணும் விடுதியின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது இதில் கோபமடைந்த அந்த இளம்பெண் வேகமாக தனியார் விடுதிக்குள் சென்றார். இதனால் வாலிபரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் விரக்தியில் இருந்த இளம்பெண் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக இளம்பெண்ணின் காதலனை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் விடுதியில் 4-வது மாடியில் இருந்து இளம்பெண் குதித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+