கோவையில் அத்துமீறிய இறைச்சி கடைக்காரர்.. அவமானமாக நினைத்து சொல்லாத 78 வயது மூதாட்டி.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை மாவட்டம் பேரூர் அருகே 78 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். தனது வீட்டில் அருகில் வசிக்கும் முருகனிடம் மூதாட்டி அவ்வப்போது உதவி கேட்பாராம். அப்படி கேட்கும் உதவிகளை முருகனும் செய்து வந்தாராம். அப்படித்தான் ஒரு உதவிக்காக போன போது, தனியாக இருந்த மூதாட்டியை கைகளை கட்டிப்போட்டு முருகன் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பேரூர் அருகே 78 வயது மூதாட்டி வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணம் முடிந்து வெளியூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பேரூர் அருகே மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். மூதாட்டியின் வீட்டின் அருகே முருகன் (வயது 47) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார்.

coimbatore temple crime

இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். முருகன் அந்த பகுதியில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.மூதாட்டி தனியாக வசித்து வந்ததால் அவ்வப்போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அருகில் வசிக்கும் முருகனிடம் கேட்டு வந்தாராம். முருகனும் அவ்வப்போது உதவிகள் செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாராம்.

சம்பவம் நடந்த அன்று மூதாட்டியின் வீட்டில் உள்ள மின்விளக்கு பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதிய மின்விளக்கு ஒன்றை வாங்கி மாட்டிவிடுமாறு முருகனை மூதாட்டி அழைத்துள்ளாராம். உடனே அவரும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் மீது முருகனுக்கு சபலம் ஏற்பட்டிருக்கிறதாம். உடனே மூதாட்டிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

உடனே ஆவேசமான முருகன், மூதாட்டியின் கைகளை கட்டிப்போட்டு, வாயை துணியை வைத்து மூடி பலாத்காரம் செய்தார். வயது முதிர்வின் காரணமாக, அவரிடம் போராடி மூதாட்டியால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து முருகன் தப்பித்து ஓடிச்சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்தால் அவமானம் என்று கருதிய மூதாட்டி, இதுகுறித்து யாரிடமும் கூறவில்லையாம். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கெண்ட பாலமுருகன், இரவு நேரங்களில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். ஒரு கட்டத்தில் பயந்த மூதாட்டி இரவில் வீட்டில் தங்குவதை தவிர்த்துவிட்டு கோவிலில் தங்கி வந்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்து வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள், அற்புதமான வீடு இருந்தும் ஏன் கோவிலில் வந்து தங்குகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். உடனே மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி அழுதிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்ததை கூறினார்கள். அங்கு மூதாட்டி முருகன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவை பேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+