காதலியின் செல்போனில் இருந்த புகைப்படம்.. அதை பார்த்துவிட்ட காதலன்.. கொச்சியை அதிர வைத்த சம்பவம்
கோவை: காதல் தகராறுகள் இன்றைய 2 கே கிட்ஸ்களிடையே சர்வ சாதாரணமாக வருகிறது. நன்கு பழகுகிறார்கள். திடீரென வேண்டாம் என்று கூறி பிரிந்து செல்கிறார்கள். சிலர் வேறு பெண்ணை அல்லது வேறு ஆணை காதலிக்கிறார்கள். துணை இழந்தவர்கள் அவரை பழிவாங்க மோசமான வேலைகளை செய்கிறார்கள். பெண்களை பொறுத்தவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள்.. ஆண்களை பொறுத்தவரை, காதலியின் உயிரையே எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் கேரளாவில் வேறொரு வாலிபருடன் பழகியதால் கல்லூரி மாணவிக்கும் காதலனுக்கும் என்ன நடந்தது தெரியுமா? பார்ப்போம்.
காதல் தோல்விகளையும் சரி, காதலி வேறு ஒரு காதலிப்பதையும் சரி பல 2 கே கிட்ஸ் ஏற்பது இல்லை. காதலி பிரிந்து செல்வதைசாதாரணமாக கடந்து செல்வத இல்லை. தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்து தவறான செயல்களை செய்கிறார்கள். மிக கொடூரமாக காதலியை தாக்கி காலி செய்துவிடுகிறார்கள் சிலர். கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முண்டங்கா பகுதியை சேர்ந்தவர் சைஜு என்பவருடைய மகள் சித்திர பிரியாவுக்கு 19 வயது ஆகிறது. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 21 வயதாகும் ஆலன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
பின்னர் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். இதற்கிடையே கடந்த 5-ந் தேதி சித்திர பிரியா விடுமுறையில் சொந்த ஊருக்குள் வந்துள்ளார் 6-ந் தேதி மாலை கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளாராம். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் சித்திர பிரியாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. இதுகுறித்து காலடி போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் பெரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தியதோடு, கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள். இதில் சம்பவத்தன்று ஆலனுடன், சித்திர பிரியா இருசக்கர வாகனத்தில் செல்வதும், பின்னர் அவர்கள் வேறு பைக்கில் வந்ததும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஆலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சித்திர பிரியாவை வீட்டில் விட்டு விட்டு திரும்பி சென்றதாக தெரிவித்தார். இந்தநிலையில் மனப்பாட்டுச்சிரா கூராப்பள்ளி பகுதியில் உள்ள மைதானத்தில் சித்திர பிரியா தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆலனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சித்திர பிரியாவும், ஆலனும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த சித்திர பிரியா, வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்தாராம். அந்த நபருடன் செல்போனில் எடுத்த புகைப்படத்தை ஆலன் பார்த்து விட்டார். இதை தன்னிடம் மறைத்து விட்டதாக கூறி, சித்திர பிரியாவிடம் தகராறு செய்து, கல்லால் தலையில் அடித்து கொலை செய்ததாக கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications