2 பெண்கள் செய்த காரியம்.. "ஓடியாங்க.. ஓடியாங்க".. எக்கச்சக்கமாக சிக்கி தப்பிய திமுகவினர்.. என்னாச்சு
திமுகவினரை கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்
கோவை: திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டிய பாஜக மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனித்துபோட்டி என்ற துணிச்சல் முடிவுடன் பாஜக களமிறங்கி உள்ளது.. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு 11 முனை போட்டி நிலவும் வகையில் தேர்தல் களம் உள்ளது.. எப்படியும் வாக்குகள் பிரியவே செய்யும்.. இது பாஜக தலைவர்களும் உணராமல் இல்லை..
அதேசமயம், பாஜகவுக்கு தமிழகத்திலேயே கொங்கு மண்டலத்தில் தான் ஓரளவு ஆதரவு உள்ளது.. இந்த கோவையை பெரிதும் நம்பித்தான் துணிந்து போட்டியிட்டுள்ளது.

கோவை
தங்களுக்கு கோவையில் அதிக செல்வாக்குள்ளதால், மேயர் சீட் கேட்டது பாஜக.. ஆனால், தங்களுக்கும் கோவையில் பெரும்பான்மையான செல்வாக்கு உள்ளதாக கூறி அதிமுக கோவையை தரவில்லை.. அதுபோலவே சென்னையையும் பாஜக கேட்டுபார்த்தது.. அதையும் அதிமுக தரவில்லை.. எனவேதான் தனித்து போட்டி என அறிவித்தது.. கோவையின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13,000 இடங்களுக்குப் போட்டி நடந்தாலும், இதில், கோவை, சேலத்தில் 2,000 இடங்கள் இருக்கின்றன..

பாஜக
இதில் எத்தனை இடங்களை திமுக கூட்டணி, அதிமுக பிடிக்க போகிறது? என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.. அதற்கு பிறகுதான், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கான வாக்குகள் எவ்வளவு பிரியும் என்பது தெரியவரும். இந்நிலையில் கடந்த 2 மாதமாகவே திமுக மீது பாஜகவும், அதிமுகவும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.. ஓட்டுக்கு பணம் தருவதாகவும், பரிசு பொருட்களை விநியோகம் செய்வதாகவும் புகார் கூறி வருகின்றன..

கோவை
இப்போதுகூட கோவையில் அப்படி ஒரு புகார் எழுந்து, பரபரப்பை கூட்டிவிட்டது.. கோவை மாநகராட்சி 63 வது வார்டில் திமுக சார்பில் சாந்தி முருகனும், அதிமுக சார்பில் லதா திருமுகமும், பாஜக சார்பில் கவிதா ராஜனும் போட்டியிடுகின்றனர்... ஆனால், ராமநாதபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவினர் பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுப்பதாக சொல்லி பாஜக, அதிமுகவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக வேட்பாளர்
திருமண மண்டபத்திற்குள் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்த நிலையில் பொதுமக்களையும், திமுகவினரையும் திருமண மண்டபத்திற்குள்ளேயே வைத்து முன்பக்க கதவை பாஜக வேட்பாளர் கவிதா ராஜனும், அதிமுகவினரும் பூட்டு போட்டு பூட்டினர்... பிறகு, திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு இருவரும் தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வருவதற்குள், திமுகவினர் திருமண மண்டபத்தில் பின்புற வாசல் கதவை திறந்து விட்டு பொதுமக்களை வெளியேற்றினர்.

தள்ளுமுள்ளு
பொது மக்கள் கூட்டமாக பின்புற வாசல் வழியாக வெளியேறிய நிலையில், அவர்களை பாஜக மற்றும் அதிமுகவினர் தடுத்தனர்... இதனால், வாக்குவாதம், தள்ளு முள்ளு, கைகலப்பு போன்றவை ஏற்பட்டது.. போலீசார் அசம்பாவிதம் நடக்காமல் இவர்களை சமாதானப்படுத்தினர்.. எனினும் உயர் அதிகாரிகள் வருவதற்கு முன்பேயே திமுகவினரும் பொதுமக்களும் கலைந்து சென்றுவிட்டனர்.. இப்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. உண்மையிலேயே திமுகவினர் பணம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Recommended Video


ஆர்ப்பாட்டம்
ஆனாலும் பாஜகவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.. திமுகவினர் தப்பி சென்றுவிட்ட நிலையில், அவர்களின் செயலை கண்டித்து அதிமுகவினருடன் சேர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... "பணம் கொடுக்கும் விஷயமே லேட்டாகதான் தெரிந்தது.. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று வேட்பாளர் கவிதாராஜன் குற்றம்சாட்டினார்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது












Click it and Unblock the Notifications