பொள்ளாச்சியில் மது போதையில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி பயணம்.. எதிரே காத்திருந்த எமன்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் சூலேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த பாரத் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இளைஞர்கள் இருவரும் மது போதையில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த டிராக்டர் இருவருக்கும் எமனாக மாறி உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து காரணமாக இன்று இருவருமே உயிருடன் இல்லை.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களால் நிதானமாக இருக்க முடியாது. ஆனால் அதை உணராமல் பலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு டாஸ்மாக் வாசலிலும், ஒவ்வொரு தனியார் மதுக்கடைகளிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்வதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது
இதில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர்கள் நிதானம் இழந்து யார் மீது வேண்டுமானாலும் மோதலாம் என்ற அபாயம் இருக்கிறது. சில இருசக்கர வாகன ஓட்டிகள், பெரிய வாகனங்களில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்பு அதிகம். இப்படியான விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சியிலும் அப்படியான ஒரு விபத்து தான் நடந்துள்ளது.
பொள்ளாச்சி இளைஞர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (30). கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சூலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் பாரத் (33). இவர்கள் இருவரும் வடக்கி பாளையத்திலிருந்து புரவிபாளையம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் பக்கோதி பாளையத்தை சேர்ந்த விவேகானந்தர் (43) என்பவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டு
இந்நிலையில் இளைஞர்கள் சதாசிவம் மற்றும் பரத் ஆகியோர் மது போதையில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை அதிவேகமாக இயக்கிச் சென்று டிராக்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் பயணித்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பாரத் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அருக மதுபோதையில் கார் ஓட்டிய நபரால் விபத்து
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மது போதையில் ஒருவர் தாருமாறாக கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இரண்டு கார், 6-இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. இதில் காரில் இருந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஓட்டுனரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து மதுரை சாலை நோக்கி அதிவேகமாக ஒரு கார் சென்றது. அந்த கார் நேராக மதுரை சாலையில் செல்ல வேண்டிய நிலையில், திடீரென செம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை பேருந்துகள் வெளியேறும் செல்லும் பகுதியில் சென்று பின்னர், ஒரு வழிச்சாலையில் அதிவேகமாக சென்றது.

நிற்காமல் சென்றது
அப்போது, எதிரே வந்த ஒரு கார் மற்றும் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதி நிற்காமல் சென்றது. அப்போது, மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு, சாலை ஓரம் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அவர் சுமார் 30 அடி தூரம் கார் முன்பகுதியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். மேலும், வேகமாக சென்ற கார் எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி, வேகமாக சென்ற காரின் இடது புறம் உள்ள, முன் டயர் வெடித்து சாலையில் கார் நின்றது.
தப்பி ஓடினார்கள்
இந்த விபத்தால் பொதுமக்கள் சாலையில் அலறியடித்து ஓடினர். அப்போது, காரில் வந்த ஓட்டுநர் உட்பட 3. நபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் இரண்டு நபர்கள் தப்பி ஓடி விட்டனர். கார் ஓட்டி சென்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து செம்பட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். குடிபோதையில் கார் ஓட்டி சென்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு கார்கள் 6 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில், முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, செம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டிச் சென்ற நபரை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications