கோவை அவிநாசி சாலையில் வந்த திடீர் மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு செம சர்ப்ரைஸ்! இனி பிரச்சனையே இருக்காதாம்
கோவை: கோவை நகரில் டிராபிக் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவிநாசி சாலையில் டிராபிக் நெரிசலைக் குறைக்க போலீசார் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.
இந்தியாவில் மிக வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட சென்னைக்கு அடுத்து மிக முக்கிய நகராகக் கோவை இருக்கிறது. ஐடி, தொழிற்சாலைகள் எனப் பல துறைகளில் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது.
இதன் காரணமாகக் கோவையில் வாகன நெரிசலும் அதிகரித்தே வருகிறது. பேருந்தைத் தவிர போது போக்குவரத்து எதுவும் பெரிதாக இல்லாத நிலையில், டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

கோவை டிராபிக்: கோவையில் அதிகரிக்கும் டிராபிக் பிரச்சினையைச் சரி செய்யும் வகையில் கோவை மாநகராட்சி மற்றும் கோவை போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் குறிப்பாக அவிநாசி சாலையில் வாகன நெரிசல் அதிகமாகவே இருக்கும். பீக் ஹவரில் அவிநாசி சாலையில் செல்லும் போது நிச்சயம் குறிப்பிடத்தக்க நேரம் சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய சூழலே உருவாகும்.
இதனிடையே முக்கிய நடவடிக்கையாக அவிநாசி சாலையை சிக்னல் இல்லாத சாலையாக மாற்றும் முயற்சியில் கோவை மாநகர போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக அங்கே ஆறு முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை தற்காலிகமாக ஆப் செய்து வைத்துள்ளனர். அதற்குப் பதிலாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் யு-டர்ன்களை போடும் வகையில் சாலைகள் மாற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் யு-டர்ன்கள் சாலையை சுருக்குவதால் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழு சிக்னல்கள் மூடல்: அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் மற்றும் சித்ரா (விமான நிலைய சந்திப்பு) வரை மொத்தம் 13 சிக்னல்கள் இருக்கும் நிலையில், அதில் ஏழு மட்டுமே தற்போது செயல்படுகிறது. மீதமுள்ள சிக்னல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சிக்னல்கள் அருகே யு-டர்ன் பாயின்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைவதோடு, வாகனங்களுக்கு எரிபொருள் பயன்பாடும் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் குறித்து மக்களிடையே கருத்துகளைக் கேட்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் அவிநாசி உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டம் முடிவதற்குள் மீதமுள்ள ஏழு சிக்னல்களையும் நிறுத்திவிட்டு, 10.5 கிலோமீட்டர் தூர சாலை முழுக்க சிக்னல் இல்லாத சாலையாக மாற்ற போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நவ இந்தியாவிலிருந்து ஹோப் காலேஜ் வரை சுமார் 4 கி.மீ தூரத்தில் ஆறு சிக்னல்கள் இருந்ததால் சிக்னல்களில் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது. ஆனால், இப்போது சிக்னல்களுக்குப் பதிலாக யு-டர்ன்கள் இருப்பதால் போக்குவரத்து எளிதாக நிற்காமல் செல்கிறது.
என்ன பிரச்சினை: ஒரு தரப்பினர் இதை வரவேற்கும் போதிலும் மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பே தெரிவித்து வருகின்றனர். பீளமேடு பகுதியில் அடுத்தடுத்து சிக்னல்கள் இருந்த இடத்தில் யு-டர்ன் அமைக்கப்பட்டுள்ளதால் அதுவே பீக் ஹவர்ஸில் அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக மக்கள் புலம்புகின்றனர்.
யு-டர்ன் பாயின்ட்கள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.. இது பீக் ஹவர்ஸில் இடையூறாக மாறியுள்ளது. சிக்னல் இல்லாததால் வேகமாக வாகனங்களை ஓட்டுவது போன்ற விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அங்கே விபத்துகளும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எந்தவொரு திட்டமாக இருந்தாலும் விதிமீறல்கள் இருந்தால் பலன் கிடைக்காது என்பதால் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும், சிக்னல்கள் இருந்த இடத்திலும் யுடர்ன் போடப்பட்ட இடத்திலும் வேகத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
போலீசார்: இது குறித்து போலீசார் கூறுகையில், "நிறுத்தப்பட்டுள்ள சிக்னல்களுக்குப் பதிலாக, இருபுறமும் யு-டர்ன்களை அமைத்துள்ளோம்.. இந்த சாலையில் எங்கு மெதுவாகச் செல்ல வேண்டும் என்பது பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்குத் தெரியும்.
விதிமீறல்களைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேம்பாலம் பணிகள் முடிவடைந்தால், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். அப்போது இந்த யு-டர்ன்கள் பெரும் பயனளிக்கும்,'' என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications