நாட்டின் பிரதமராக வேறு யார் இருக்கலாம்? பாஜக தொண்டர்கள் பதிலால் ஆடிப்போன அண்ணாமலை.. என்னாச்சு
கோவை: கோவையில் இன்று பிரசாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாட்டின் பிரதமர் வேட்பாளராக மோடியை தவிர யாரை கூறுவீர்கள் என்று கேட்டார். அப்போது தொண்டர்கள் கொடுத்த பதிலால் அண்ணாமலை ஒரு நிமிடம் ஆடிப்போனார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளது. இதனால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை நகரத்தின் வளர்ச்சி அப்படியே முடங்கி போய் இருக்கிறது. யாரும் யாருடைய பேச்சையும் கேட்பதற்கு தயாராக இல்லை. ஒரு காலத்தில் கோயமுத்தூர் பக்கம் நாம யாராச்சு வந்தால் என்ன சொல்வாங்க.. போரது தான் போறீங்க.. ஒரு பாட்டில் தண்ணீர் சிறுவாணி ஆற்றில் இருந்து கொண்டுவாங்க என்று சொல்வார்கள்..
அண்ணாமலை பிரசாரம்: ஆனால் இப்போது 10 ஆண்டு ஆட்சியின் சாதனை என்னவென்றால், கோயம்புத்தூர் மக்களையே 10 ரூபாய்க்கு வாட்டர் கேன் தண்ணீரை குடிக்க வைத்து இருக்கிறார்கள். இது தான் இவர்களுடைய சாதனை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் சிறுவாணி ஆற்று தண்ணீர் வருகிறது. அதிலும் போர் தண்ணீர் சேர்ந்திருக்கிறது. மோடி கோவை மாநகருக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாயை கொடுத்துள்ளார்.
ரூ.1,445 கோடி கோவை மாநகருக்கு என்று மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மோடி கொடுத்துள்ளார். இங்கே உள்ள ரோடு கூட சரியாக இருக்கிறதா?.. எல்லாம் ஊழல் தான் நடக்கிறது. இந்த தேர்தல் நம்முடைய நாட்டின் பிரதமராக யார் வரவேண்டும் என்று தேர்ந்தெடுக்கின்ற தேர்தல்.. கண்டிப்பாக இந்த தேர்தல் தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரமாக இருக்கும் தேர்தல்..
பிரதமர் வேட்பாளர் யார்?: அதற்கான மாற்றத்தை இப்போது நாம பண்ணல. 2026இல் நடக்கும். அதற்கான அச்சாரத்தை இப்போது போடுகிறோம். ஆனால் இந்த தேர்தல் என்பது யார் பிரதமராக வரவேண்டு என்பது தான்.. நானே தாய்மார்களிடம் கேட்கிறேன்.. நான் பாஜகவில் இருந்து பேசுகிறேன் என்பதை மறந்துவிடுங்கள்.. ஸ்டாலின் வருகிறார் அவரும் பேசல.. பொதுவாக கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்..
வேண்டாம் என்ற தொண்டர்கள்: இன்றைக்கு பிரதமர் வேட்பாளராக மோடி இல்லையென்றால் வேறு யார் இருக்க முடியும்.. இப்போது ஒவ்வொரு பெயராக சொல்கிறேன்.. அதற்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
* அப்போது, பரூக் அப்துல்லா என்று அண்ணாமலை சொல்ல.. அய்யோ வேண்டாம் என்று கூறிய தொண்டர்கள்...
* 2வதாக நிதிஷ் குமார் பெயரை சொன்ன அண்ணாமலை... வேண்டாம்..வேண்டாம் என்ற தொண்டர்கள்..
பிரதமர் வேட்பாளர் அண்ணாமலை:
* சந்திரசேகரராவ் என்று அண்ணாமலை சொல்ல.. வேண்டாம் என்ற தொண்டர்கள்...
அப்போது சில தொண்டர்கள்.. "அண்ணாமலை தான் என்று சொன்னார்கள்". அப்போது பேசிய அண்ணாமலை, "சிரித்துக்க்கொண்டே அண்ணாமலைக்கு எம்பி தேர்தலில் ஓட்டு போட்டுடுங்க.." என்றார்.
* தொடர்ந்து உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் உதயநிதி ஸ்டாலின் என்று அண்ணாமலை சொன்னதும், தொண்டர்களிடமிருந்து வேண்டவே வேண்டாம் என்ற சத்தம் ஒலித்தது.
இது தான் மக்கள் விருப்பம்: தொடர்ந்து பேசிய அண்ணாமலை, 'வேறு யாரும் பிரதமர் வேட்பாளர் என்று இல்லைங்க... அப்புறம் எதற்கு முதல்வர் வண்டி எடுத்துக்கொண்டு செல்கிறார் என்று தெரியவில்லை. இப்போது 10 ஆண்டு காலம் பிரதமராக இருக்கும் மோடி தான் இன்னும் 5 ஆண்டு இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்றார்.
கிராமத்தில் ஒரு பழமொழி: ஸ்டாலின் சொல்கிறார்.. இந்தியாவை காப்பாற்ற போறோம் என்று.. தமிழகத்தில் திமுக நிற்பதே 21 இடம் தான். 18 இடத்தில் நிக்கல.. இவர் இந்தியாவை காப்பாற்ற போறோம்னு. திமுகவின் பிரசாரம் எப்படி இருக்கிறது என்றால், கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க.. கூரை மேலே ஏறி கோழி பிடிக்க போவார்களாம்.. அங்கே கோழி இல்லை. சரி ஏறினது ஏறிட்டோம்.. அப்படியே வைகுண்டத்திற்கு போகலாம் என்று.. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications