Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவர்ச்சி காதலி.. "காப்பாத்துங்க சார்".. போலீசுக்கு ஓடிய தொழிலதிபர்.. பின்னாடியே புகாருடன் ஓடிய பெண்

Subscribe to Oneindia Tamil

கோவை: இரவு நேரங்களில் தினமும் போன் செய்கிறார்.. தூங்க விடுவதே கிடையாது.. போன் செய்து என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று இளம்பெண் ஒருவர் தொழிலதிபர் மீது போலீசில் புகார் தந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ்.. 44 வயதாகிறது.. இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 2020-ல் லோரேன் என்ற பெண்ணின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது.. அந்த லோரேனின் மூலமாக, அவரது தங்கை ஹேசல் ஜேம்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 அழகி கவர்ச்சி

அழகி கவர்ச்சி

ஹேசல், கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்குகளில் தன்னுடைய நிறைய போட்டோக்களை அப்லோடு செய்வார்.. மார்டன் டிரஸ்தான் அணிவார்.. விதவிதமான ஆடைகளில் போட்டோக்கள், வீடியோக்களை ஹேசல் பதிவிட்டு வந்துள்ளார்.. இதையெல்லாம் பார்த்ததுமே, ராஜேஷூக்கு ஹேசலை மிகவும் பிடித்துவிட்டது.. இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், திருமணம் செய்ய இருவருமே முடிவு செய்தனர்.. அப்போது, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், ஆனால், கணவர் இறந்துவிட்டதாகவும் ஹேசல் சொன்னார்.

 இளம் விதவை

இளம் விதவை

இதைக்கேட்டு ராஜேஷ் அதிர்ந்து போனார்.. பிறகு மெல்ல சுதாரித்துக்கொண்டதுடன், இளம்விதவை என்பதால், ஹேசல் மீது நிறைய பரிதாபமும், அனுதாபமும் வந்துவிட்டது. பிறகு இன்னொரு நாள், தன்னுடைய கணவர் இறக்கவில்லை, டைவர்ஸ் கேஸ் கோவை கோர்ட்டில் நடந்து கொண்டிருப்பதாக ஹேசல் சொன்னார்.. இதைக்கேட்டதும் மறுபடியும் ராஜேஷூக்கு தலையே சுத்திவிட்டது.. எனினும், டைவர்ஸ் கிடைத்துவிடும் என்பதால், தன்னையே ஒருவழியாக தேற்றிக் கொண்டார்.. பிறகு இன்னொரு நாள், தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாக ஹேசல் சொல்லவும், ராஜேஷ் தலையில், பெரிய்யய இடியே வந்துவிழுந்துவிட்டது...

 அரவணைப்பு

அரவணைப்பு

2 குழந்தைகளை வளர்க்க தான் கஷ்டப்படுவதாகவும், தன்னுடைய தந்தையின் அரவணைப்பில்தான் இப்போது இருப்பதாகவும் கண்ணீர் வடித்துள்ளார் ஹேசல். இதைக்கேட்டதும் ராஜேஷ் மறுபடியும் அந்த பெண்ணிடம் மனமிறங்கினார்.. இதை சாக்காக பயன்படுத்தி கொண்ட ஹேசல், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்கவும், 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார் ராஜேஷ்.. பிறகு, சொந்தமாக பிசினஸ் செய்ய போவதாகவும், அதற்கு உதவி செய்யுமாறும் ஹேசல் கேட்கவும், கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்தானே என்று நம்பி, ராஜேஷ் 20 லட்சம் ரொக்கம் தந்துள்ளார்..

ஹேசல்

ஹேசல்

இதைத்தவிர, காஸ்ட்லி செல்போன், ஸ்கோடா கார் வாங்கி கொடுத்துள்ளார்.. ஆனால் அந்த பெண்ணோ, பொருட்கள், பணத்தை வாங்குவதில் மிகவும் கவனமாக செயல்பட்டு ஒவ்வொரு பொருளையும் தன்னுடைய ஒவ்வொரு சொந்தாக்காரர் பெயர்களில் வாங்கியுள்ளார்... இந்த சமயத்தில்தான் ராஜேஷூக்கு இன்னொரு அணுகுண்டு காத்திருந்தது... ஹேசலுக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கிறாராம்.. அவர் பெயர் ஜஸ்டின்.. ராணுவ வீரராம்.. அவர் மட்டுமல்ல, அவரை போலவே பல ஆண்களிடம் ஹேசல் நெருங்கி பழகி வந்துள்ளது ராஜேஷ்க்கு தெரிய வந்துள்ளது..

தப்பில்லையா

தப்பில்லையா

இதற்கு மேல் பொறுமையிழந்த ராஜேஷ், இதை பற்றி ஹேசலிடம் கேட்டதற்கு, "ஒருத்தரோடு பர்சனல் வாழ்க்கையை பற்றி கேட்கலாமா? அது தப்பில்லையா? தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது" என்று சொன்னாராம்.. தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு ராஜேஷ் கேட்டதற்கு, "பணத்தை திருப்பி தர முடியாது, பணத்தை திருப்பி கேட்டால், தன்னுடைய 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன்.. 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில், 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது" என்றாராம்.. இதனால், ராஜேஷ் உயிருக்கு பயந்துகொண்டு, கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் சில நாட்களுக்கு முன்பு குறித்து புகார் அளித்திருக்கிறார்.

 காஸ்மெட்டிக்ஸ்

காஸ்மெட்டிக்ஸ்

இந்த புகாரின்பேரில், ஹேசல் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் போத்தனூர் போலீசில், ராஜேஷ் மீது புகார் கொடுத்துள்ளார் ஹேசல்.. அந்த புகாரில், "எனக்கும், தர்மதுரை என்பவருக்கும் திருமணம் நடந்தது.. பிறகு, எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நாங்கள் 2 பேரும் பிரிந்துவிட்டோம். நான் என்னுடைய தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மும்பையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான ராஜேஷ் என்பவர் அறிமுகம் ஆனார்.

 பியூட்டி காஸ்மெடிக்ஸ்

பியூட்டி காஸ்மெடிக்ஸ்

அவரிடம் நட்பாக பழகி வந்தேன். நான் சொந்தமாக அழகு சாதன பொருட்கள் மற்றும் கார்மெண்ட்ஸ் நடத்தி வருவதாக அவரிடம் சொன்னேன்.. அவர் நாம் 2 பேரும் சேர்ந்து இந்த தொழிலை நடத்தலாம் என்றார். அதன்படி 2 பேரும் சேர்ந்து தொழில் செய்து வந்தோம். அவர் மும்பையில் இருந்து பொருட்களை வாங்கி இங்கு அனுப்பி வைப்பார். நான் அதனை விற்பனை செய்து வந்தேன். இது தொடர்பாக அடிக்கடி போனில் பேசி வந்தோம். இந்நிலையில் நாட்கள் செல்ல, செல்ல ராஜேஷ் என்னிடம் ஆபாசமாக பேச தொடங்கினார்... நான் அதனை கண்டித்தேன். இருப்பினும் அவர் அப்படியே பேசி வந்தார். இதனால் நான் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தேன்.

 தப்பு தப்பு

தப்பு தப்பு

நான் பேசாததால் அவர் எனக்கு கொடுத்த பணத்தை கேட்டு தினமும் மிரட்டல் விடுக்கிறார். மேலும் இரவு நேரங்களில் போன் செய்து என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி பணம் கேட்டு மிரட்டுகிறார். இதுகுறித்து என்னுடைய கணவரிடமும் சொல்லியுள்ளார்.. அவரும் எனக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர்கள் 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இரு தரப்பிலுமே புகார்கள் வந்துள்ளால், இதில் யார் சொல்வது உண்மை என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை துவக்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+