சிறுவாணியில் இருந்து கோவைக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திடீரென 50 சதவீதம் குறைத்த கேரளா.. என்ன காரணம்?
கோவை: கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சிறுவாணி அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவை திடீரென பாதியாகக் குறைத்துள்ளதால், கோவை மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்துள்ளது.. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு (சிசிஎம்சி) தினமும் விநியோகிக்கப்படுகிறது .

கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீர் ஆக உள்ளது. இதில் 101.40 எம்எல்டி தண்ணர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.
சிறுவாணி அணையில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதை அறிய பழைய வரலாற்றை நாம் முதலில் அறிய வேண்டும். 1973ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசு இடையே நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, சிறுவாணி அணையில் ஆண்டுதோறும் (ஜூலை 1 முதல் 30 வரை) 1.30 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி) வழங்க வேண்டும். பழைய கோயம்புத்தூர் நகராட்சிக்கு 99 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்காக வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
கேரள நீர்ப்பாசனத் துறை, சிறுவாணி அணையில், மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அணையின் கொள்ளளவை 50 அடியாக பராமரிக்கவிடுவது இல்லை. முழு நீர்த்தேக்க மட்டமான 50 அடிக்கு பதிலாக, அதிகபட்சமாக 45 அடி நீர்மட்டத்தை பராமரித்து வருகிறது. இதுவும் முல்லை பெரியாறு அணை போல் தான்.. சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 5 அடி குறைப்பதால் 122.05 மில்லியன் கன அடி (mcft) தண்ணீர் பற்றாக்குறை கோவைக்கு ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இது மொத்தமா அணையில் சேமிக்கப்படும் நீரில் 19% ஆகும்.
இதன் காரணமாக கோடை காலங்களில் கோவை மாநகரின் தேவைக்கு போதுமானதாக சிறுவாணி அணை இல்லை. இந்நிலையில் சிறுவாணி அணையின் வால்வுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பாலக்காட்டில் உள்ள கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்துக்கு வரும் நீர்வரத்தை பாதியாகக் குறைத்துள்ளது. இது கோவை மாநகராட்சி அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (சிறுவாணி பிரிவு) மூத்த அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில ஊடகமான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "கடந்த வாரம் சிறுவாணி அணையில் இருந்து சுமார் 73 முதல் 75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரள நீர்ப்பாசனத் துறை, 35 முதல் 37 கனஅடியாக நீர்வரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.தற்போது, நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளவான 50 அடியில் 25.8 அடியாக இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் கேரள அதிகாரிகளை கேட்ட போது, அரசு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டனர். சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்துள்ளது குறித்து எங்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்றார்.
சிறுவாணியில் இருந்து கோவைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது குறித்த கோவை மாநகராட்சி கவுன்சிலர்களும், பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் குறைந்த காரணத்தால், கேரளாவிற்கு நீர் திறப்பை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அண்மையில் குறைத்தனர். இதற்கு பதிலடியாகவே கேரள நீர்ப்பாசனத் துறை , சிறுவாணி அணையின் நீர் விநியோகத்தை குறைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே பல கவுன்சிலர்கள் சிறுவாணி அணையின் நீர்வரத்து குறைந்தது குறித்த கவலை தெரிவித்த நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உடனடியாக இந்த பிரச்னையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், "இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தலைமை செயலரிடம் புகார் அளித்திருக்கிறோம். இது குறித்து அமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம். மேலும் அரசு மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரச்சினையை விரைவில் தீர்க்கப்படும் அதேநேரம்பில்லூர் திட்டம்-3 திட்டம் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். எனவே தற்போது உள்ள நிலைமையை நிச்சயம் சமாளித்துவிட முடியும்.
ஆழியாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் அதன் முழு நீர்த்தேக்க அளவான 120 அடி என்கிற நிலையில் தற்போது 78.5 அடியாக உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3864.41 மில்லியன் கன அடி மொத்த கொள்ளவில், தற்போதைய நீர் இருப்பு 1332.79 மில்லியன் கன அடியாக உள்ளது, கடந்த ஆண்டு இதே தேதியில் நீர் இருப்பு 2354.25 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 41 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், கேரளாவுக்கு 290 கன அடி வீதம் 307 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு 160 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், அதன் பின்னர் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications