பெற்ற மகனை அடியாட்களுடன் கணவன் வீட்டுக்கு கடத்த முயன்றதாக மனைவி மீது புகார்.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகர் பகுதியில் கணவனிடம் இருக்கும் குழந்தையை மீட்க அடியாட்களுடன் மனைவி வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையை கடத்த வந்ததாக துடியலூர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.
கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாககணேஷ். இவர் கோவையில் மருந்து மொத்த விற்பனையாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அரியலூரில் நகைக்கடை வைத்துள்ள தியாகராஜன் என்பவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற 7 வயது மகன் உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல உடன்பட்டு வழக்கறிஞர்களைக் கொண்டு பேசி கணவர் நாககணேஷ் மனைவி ஐஸ்வரியாவிற்கு 65 லட்சம் பணம் மற்றும் நகை அடகு கடை ஆகியவைகளை கொடுத்து பிரிந்து செல்வது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன் கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலதாமதம் ஆகியுள்ளது கூறுகின்றனர். அதுவரை அவரது தன்னுடன் இருந்த மகன் ராஜேந்திரனை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்து ஐஸ்வர்யா தனது கணவருடன் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அதன் பின் இதுவரை எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் இடையர்பாளையத்தில் உள்ள நாககணேசின் வீட்டிற்குள் 3 பேர் காரில் வந்துள்ளனர். காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு ஒருவர் கேட் அருகே நின்று கொள்ள மற்ற இருவர் 2 பேர் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்த 2 பேர் நாககணேசின் அவரது தாயை தள்ளிவிட்டு உள்ளிருந்த அவரது மகனை தூக்கிச் செல்ல முயற்றுள்ளனர்.
இதைப் பார்த்த நாககணேஷ் நீங்கள் யார் என கேட்டு அவர்களை தடுத்துள்ளார். அதற்குள் நாககணேசின் தந்தை குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.
உள்ளிருந்தவாரே போலீஸுக்கு போன் செய்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த 2 பேரும் வீட்டிற்கு வெளியே வந்துவிட்டனர். அப்போது சத்தம் போட்டபடியே வெளியே வந்த நாககணேஷ் வீட்டிற்கு வெளியே நின்ற காரை பார்த்த போது அதில் அவரது மனைவி ஐஸ்வர்யா இருந்துள்ளார்.
செல்போனை எடுத்து வந்து அவர்களை போட்டோ எடுக்க முயன்றபோது அதற்குள் காரை எடுத்துக் கொண்டு வீட்டினுள் வந்த 3 பேருடன் அங்கிருந்து சென்று விட்டனர். இவை அனைத்தும் அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைக் கொண்டு துடியலூர் காவல் நிலையத்தில் நாககணேஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவருடன் வந்த 3 பேர் தனது குழந்தையை கடத்த முயன்றதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் துடியலூர் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications