கோவை மருதமலை கோயிலில்.. யாருப்பா அது மொரட்டு ஆளா இருக்க.. கிட்ட போய் பார்த்து.. அரண்ட மக்கள்
கோவை: கோவை மருதமலை முருகன் கோவில் அருகே உண்டு உறைவிடப் பள்ளியை தேடி வந்த விருந்தாளிகளை கண்டு அந்த பகுதி மக்கள் பயந்து போனார்கள்.. இரவு வேளையில் திடீரென விருந்தாளியாக வந்த இரண்டு காட்டு யானைகள் என்ன செய்தன என்பதை பற்றி பார்ப்போம்.
கோவையின் மையப்பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது மருதமலை. மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில், அவரது ஏழாவது படைவீடு என்கிற அளவிற்கு போற்றப்படுகிறது. இந்த கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். மருதமலையில் கணிசமாக பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.
முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள்தான் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறார்கள். மருதமலை பழங்குடியின குழந்தைகள் படிப்பதற்காக மலை மேல் உண்டு உறைவிடப் பள்ளி இருக்கிறது. அங்கு 5-ம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மருதமலையில் வாகனங்கள் செல்லும் மலைப்பாதை மற்றும் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சர்வ சாதாரணமாக யானைகள் மருதமலைக்கு வந்த வண்ணம் உள்ளன. இதுவரை பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை.
எனினும் பக்தர்கள் நலன் கருதி, மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மருதமலையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கூடத்திற்கு அருகே நேற்று இரவு 2 காட்டு யானைகள் முகாமிட்டு நின்று கொண்டே இருந்தன. பின்னர் பள்ளிக்கு சென்று அங்கு உணவு ஏதும் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தன.
அதை பார்த்து மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அங்கு உணவு இல்லை. இதுபற்றி அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத் துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி மருதமலைக்கு யானைகள் வருவதால் மாலை நேரங்களில் மலைக்கு செல்வோர் கவனமாக செல்வது நல்லது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications