Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தமிழக பாஜகவில் நிலவும் "கோவை வடக்கு" தொகுதி மோதல் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய 2 முக்கிய தலைவர்களும் ஒரே தொகுதிக்காக பிடிவாதம் பிடிப்பதால், வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் டெல்லி மேலிடம் திணறி வருவதாக தெரிகிறது.. இதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஆனால் பாஜக தமிழகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இந்த தாமதத்திற்கு காரணம் அண்ணாமலை தான் என்று கூறப்படுகிறது.

Coimbatore North Constituency

காரணம் தனக்கு வெற்றி வாய்ப்புள்ள, தான் விரும்பும் தொகுதியை பாஜக தலைமை இன்னும் இறுதி செய்யாததால் தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்க்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதி

பல்வேறு காரணங்களால் கடும் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை இந்த முறை கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கான கிரின் சிக்னல் இன்னும் பாஜக தலைமை இடம் இருந்து வரவில்லை.

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் கோவை வடக்கு மட்டுமே பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கி உள்ளது. இதனால் கோவை வடக்கு தொகுதியிலாவது தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம் அண்ணாமலை. ஆனால் கோவை வடக்கு தொகுதியை தனக்கு தர வேண்டுமென சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசன் காய் நகர்த்த ஒப்புக்கொள்ளவில்லை.

அண்ணாமலை போட்டி?

தனக்குத் தோதான தொகுதி கிடைக்காதோ என்று அதிர்ச்சியில் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்த அண்ணாமலையை கன்வின்ஸ் செய்து, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வற்புறுத்தியது. ஆனால் அதற்கு அண்ணாமலை ஒப்புக்கொள்ளவில்லை. கோவை வடக்கு தொகுதியை எப்படியேனும் பெற்று விட வேண்டும் என அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். ஆனால் கோவை வடக்கு தொகுதியை வானதி சீனிவாசனும் விட்டுக்கொடுத்த பாடில்லை.

காரணம் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆனார். ஆனால் கடந்த தேர்தலில் அவர் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். அதனால் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதை வானதி சீனிவாசனை விரும்பவில்லையாம்.

வானதி சீனிவாசன் டிமாண்டு

அதே நிலையில் கோவை தெற்கு தொகுதியை அதிமுக தன் வசம் வைத்துக் கொண்டது அந்த தொகுதியில் அம்மன் அர்ஜுனனை வேட்பாளராகவும் அறிவித்துவிட்டது அதிமுக. எனவே வானதிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கோவை வடக்கு தொகுதி தான். ஆனால் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டுமென அடம்பிடித்து வருகிறார்.

இதற்கும் காரணம் உண்டு... கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தான் மிக அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். எனவே அப்போதிருந்தே கோவை வடக்கு தொகுதியை குறி வைத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் களப்பணி செய்து வருகிறார்கள். இப்படி பாடுபட்டு தன் செல்வாக்கை உயர்த்தி வைத்திருக்கும் கோவை வடக்கு தொகுதியை விட்டுக் கொடுக்க அண்ணாமலையும் தயார் இல்லை.

பாஜக குழப்பம்?

இந்த விவகாரத்தால் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்ய முடியாமல் பாஜக தலைமை திண்டாடி வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. பாஜக தலைமையின் அழுத்தத்தால் ஒருவேளை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதற்கு ஈடாக வானதி மற்றொரு டிமாண்ட்டை பாஜக தலைமையிடம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை வடக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு தான் போட்டியிலிருந்து விலகுவதென்றால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் தற்போதுள்ள ஒரு இணையமைச்சரின் இலாகாவை தனக்கு ஒதுக்க பாஜக தலைமை ஒப்புதல் அளிக்க வேண்டுமென வானதி சீனிவாசன் டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவை வடக்கு தொகுதிக்காக மல்லுக்கட்டும் அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவரில் யாரை கன்வின்ஸ் செய்வது என தெரியாமல் பாஜக தலைமை விழி பிதுங்கி நிற்கிறதாம்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு சில நாட்கள் என்றிருந்த நிலை மாறி தற்போது சில மணி நேரங்கள் என உள்ளதால், இந்த நெருக்கடியான சூழலில் பாஜக தலைமை என்ன அதிரடி முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

- நமது சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+