Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையின் கலரே மாறப்போகுது.. அசுர வேகத்தில் உருவாகுது சிப்காட்.. இவ்வளவு ஸ்பீடா.. மக்களுக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூரில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கான அடிப்படை கட்டுமானங்கள் அங்கே நடந்து வருகின்றன.

கோயம்புத்தூர் வாரப்பட்டியில் தனது முதல் சிப்காட் தொழில் பூங்கா (பாதுகாப்பு) அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் மொத்த பரப்பு : 372.7 ஏக்கர். இதற்கான மொத்த செலவு : 293 கோடி ரூபாய். எதிர்பார்க்கப்படும் கட்டுமானப் பணிகள்: நவம்பர் 2024.

Works for Coimbatore Sipcot has floated tenders First phase works are happening in full swing

தற்போது 373 ஏக்கர் பரப்பளவுள்ள வரப்பட்டி பாதுகாப்பு பூங்காவிற்கு சாலைகள், தண்ணீர் மற்றும் தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கு சிப்காட் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதற்கான பணிகள் நடக்க உள்ளன.

இது போக திண்டிவனம் , தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் ஐடி நிறுவனங்கள் உருவாக்கப்படும் நிலையில் தற்போது சிப்காட் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.

இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.

நல்ல செய்தி; மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனியில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. மெகா புட் பார்க் அமைக்க, அங்கே உணவு பொருட்களை சந்தைப்படுத்த ஆலோசகரை நியமிப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி இங்கே பிரம்மாண்ட புட் கோர்ட் அமைக்கப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை: இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் ஐடி பூங்கா, தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பல இடங்களில் தொடங்கி உள்ளன.

அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் 190.42 ஏக்கரில் காலணி உற்பத்திக்காக புதிய தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் விண்ணப்பித்துள்ளது. தைவானின் Pou Chen 20,000+ பேருக்கு வேலைவாய்ப்புடன் இங்கு ஒரு ஆலைக்காக 2,302 கோடி முதலீடு செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+